ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் மழைநீர் அகற்றும் பணி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னையில் மழைநீர் அகற்றும் பணி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

MKstalin | சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai | Chennai [Madras] | Tamil Nadu

  சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை கனமழை தொடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சென்னை வேளச்சேரி பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

  மதுரையில் இருந்து சென்னை திரும்பிய முதலமைச்சர், சென்னை வேளச்சேரியில், மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடியிடம் கேட்டறிந்தார். நீரேற்று நிலையத்தில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு இருப்பவர்கள் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களே.

  சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை; தேங்கினாலும் உடனே வெளியேற்றப்பட்டு விடுகிறது என்று பொதுமக்கள் அரசை வாழ்த்துகிறார்கள் என்றால்அதற்கு முக்கியக் காரணம் இப்பணியாளர்களின் இடைவிடாத பணியே. அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அந்த ஊழியர்களுக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

  திண்டுக்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை வந்த நான் வேளச்சேரி கல்கி நகர் பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்தேன். இவர்கள் மகத்தான பணி அனைவராலும் பாராட்டத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chennai, CM MK Stalin, Heavy rain, MK Stalin, Weather News in Tamil