ஹோம் /நியூஸ் /சென்னை /

”களப்பணிக்கு முக்கியத்துவம் தர வேண்டும்...” - காவல்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

”களப்பணிக்கு முக்கியத்துவம் தர வேண்டும்...” - காவல்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

காவல் துறை அதிகாரிகள் களத்திற்கு நேரில் சென்று பணியாற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

களப்பணிக்கு காவல்துறையினர் முக்கியத்துவம் தர வேண்டும் என சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.

இதில் உள்துறை செயலாளர் பணீந்தர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிற காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் பயங்கரவாத தடுப்புப் படையை உருவாக்குவது, கஞ்சா ஒழிப்பு பணியை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில் அதிகாரிகள் மத்தியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களிடையே சிறு பிணக்குகள் ஏற்படாத வகையில் களப்பணியாற்ற வேண்டும் என்றும், உளவுத்தகவல்கள் குறித்து களத்திற்கு நேரில் சென்று விசாரித்து, தலைமை அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அதிகாரிகளைகேட்டுக் கொண்டார்.

மேலும், குற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகையை விரைந்து தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

First published:

Tags: CM MK Stalin, Police