ஹோம் /நியூஸ் /சென்னை /

மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் உயர்வு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் உயர்வு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

வருவாய்துறை மூலம், கண் பார்வையற்றோர் உள்ளிட்ட 4,39,315 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 1000 ரூபாயில் இருந்து 1500ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ஜனவரி 1ம் தேதி முதல் 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கில் மாற்றுத்திறனாளிகள் தயாரித்த கைவினைப் பொருட்கள் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதையும் படிக்க :  திராவிட இயக்கத்தின் அடிநாதத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு, விருதுகளை வழங்கி கவுரவித்தார். மேலும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த சிரமமும் ஏற்படக்கூடாது என எண்ணி அரசு செயல்பட்டு வருகிறது என்றும், பிறவிக் குறைபாடோ, விபத்தால் ஏற்பட்டிருந்தாலோ பாதிக்கப்பட்டவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் கூறிய அவர், வருவாய்துறை மூலம், கண் பார்வையற்றோர் உள்ளிட்ட 4,39,315 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 1000 ரூபாயில் இருந்து 1500ரூபாயாக வருகின்ற ஜனவரி மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.

உடல் குறைபாடு இருந்தாலும், மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளம், அறிவு, திறன் குறைபாடு இல்லை என்றும் குறிப்பிட்டார். மெரினா மரப்பாதை மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்கான அன்பு பாதை எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

First published:

Tags: Chennai, CM MK Stalin, Pension Plan, Physically challenged