ஹோம் /நியூஸ் /சென்னை /

பள்ளி மாணவிக்கு மாணவன் தாலி கட்டிய விவகாரம்: போலீஸுக்கு உயர்நீதிமன்றம் அடுக்கிய கேள்விகள்!

பள்ளி மாணவிக்கு மாணவன் தாலி கட்டிய விவகாரம்: போலீஸுக்கு உயர்நீதிமன்றம் அடுக்கிய கேள்விகள்!

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

தகுந்த விளக்கத்துடன் ஆவணங்களை சமர்பிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கு விசாரணையை 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chidambaram | Chidambaram Nm | Tamil Nadu

  சிதம்பரம் பஸ் ஸ்டாப்பில் பள்ளி மாணவிக்கு, பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டிய விவகாரத்தில், மாணவன் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் எப்படி வழக்குப்பதிவு செய்ய முடியும் என சிதம்பரம் போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

  கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிறுத்தத்தில் பாலிடெக்னிக் மாணவர் ஒருவர் பள்ளி மாணவிக்கு சீருடையிலேயே தாலிகட்டிய வீடியோ இணையத்தில் வைரலானது. இது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகள், சிதம்பரம் போலீசில் புகார் கொடுத்தனர்.

  அதன் அடிப்படையில், மாணவன் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மாவட்ட குழந்தை நல குழு அதிகாரி அந்த மாணவியை மீட்டு காப்பக்கத்தில் சேர்த்தார்.

  இதையடுத்து தனது மகளை ஒப்படைக்க கோரி மாணவியின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவியின் தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

  Also read | வீட்டில் தெலுங்கு பேசும் நீங்கள் அந்நியரா? நான் அந்நியரா? - முரசொலி கட்டுரைக்கு தமிழிசை விமர்சனம்!

  இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தாலிகட்டிய மாணவன் மைனர் என்றும், அவன் மீது எப்படி குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியும் என சிதம்பரம் போலீசாருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

  மேலும், காப்பகத்தில் மாணவியை அடைத்தது சட்டவிரோதம் என தெரிவித்த நீதிபதிகள் மாணவியை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

  தொடர்ந்து பல கேள்விகளை முன் வைத்த நீதிபதிகள் தகுந்த விளக்கத்துடன் ஆவணங்களை சிதம்பரம் இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்ய வேண்டும் என கூறி விசாரணையை வரும் 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chennai High court, Chidambaram