Home /News /chennai /

லேடீஸ் ஹாஸ்டலில் புகுந்து கைவரிசை காட்டிய இளைஞர்கள் - கஞ்சா அடிக்க திருட்டில் ஈடுபட்டதாக வாக்குமூலம்

லேடீஸ் ஹாஸ்டலில் புகுந்து கைவரிசை காட்டிய இளைஞர்கள் - கஞ்சா அடிக்க திருட்டில் ஈடுபட்டதாக வாக்குமூலம்

கைதான இளைஞர்கள்

கைதான இளைஞர்கள்

Chennai : கஞ்சா அடிப்பதற்காக மகளிர் விடுதிக்குச் சென்று கதவை உடைத்து சிறிது சிறிதாக திருடியது அம்பலமானது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
சென்னை சாலிகிராமம் காந்திநகர் கலைஞர் கருணாநிதி தெருவில் சமூக நலத்துறை சார்பாக கட்டப்பட்ட அரசு மகளிர் விடுதி உள்ளது.
அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்காக இந்த மகளிர் விடுதி கடந்த 2010 ஆம் ஆண்டு கட்டப்பட்டு பின் அரசு பணியில் இருக்கும் மகளிர் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அந்தக் கட்டிடம் செயல்படாமல் இருந்துவந்துள்ளது. காலி மைதானங்களுடன் செயல்படாமல் இருந்த இந்த மகளிர் விடுதி நாளடைவில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. மாலை 5 மணியிலிருந்து சமூக விரோதிகள் பலர் கஞ்சா குடிப்பது, கஞ்சா விற்பனை செய்வது, மது குடிப்பது, பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழில் செய்வது என பல்வேறு சமூக விரோத செயல்களை செய்து வந்துள்ளனர்.
இதனால் கலைஞர் கருணாநிதி தெருவில் வசிக்கும் பொதுமக்கள் பலர் இதுகுறித்து காவல் நிலையங்களில் புகார் தெரிவித்து வந்துள்ளனர்.

ஷாக்கான அதிகாரிகள்:

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக மாவட்ட சோசியல் வெல்ஃபர் அதிகாரி மங்கையர்கரசி செயல்படாமல் இருந்து வந்துள்ள மகளிர் விடுதியில் அதிகாரிகளுடன் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மகளிர் விடுதியில் இருந்த சீலிங் ஃபேன் 93, மரக்கட்டில் 30, புகைபோக்கும் ஃபேன் 4, பாத்ரூம் ஃப்ளாஸ் டேங்க் 8, பாத்ரூமில் இருந்த பைப்புகள், நாப்கின் மெஷின் 1,  கேஸ் ஸ்டவ் 2, நாற்காலி, டேபிள், மேசைகள் என பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது.

Also Read: 5 வருஷமா குழந்தை இல்லை.. சண்டைபோட்ட அக்கா கணவரை கத்தியால் குத்திய தம்பி - ராணிப்பேட்டையில் பயங்கரம்

இதனையடுத்து மாவட்ட சோசியல் வெல்ஃபேர் அதிகாரி மங்கையர்கரசி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மகளிர் விடுதியில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிய வடபழனி மன்னார் முதல் தெருவை சேர்ந்த சஞ்சய் குமார் (19), வடபழனி ராஜாங்கம் மத்திய வீதி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (22), ராமு ஆகிய மூவரையும் கைது செய்தனர்.இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கஞ்சா அடிப்பதற்காக மகளிர் விடுதிக்குச் சென்றபோது கதவை உடைத்து சிறிது சிறிதாக திருடியதாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சீலிங் ஃபேன் மரக்கட்டில் புகை போக்கும் பேன் ஆகிய பொருட்களை திருடியதாக ஒப்புக்கொண்டனர்.

முக்கிய குற்றவாளியை தேடும் போலீஸ்:

மேலும், திருடப்பட்ட பொருட்களை வடபழனி பகுதியைச் சேர்ந்த திலகராஜ் (24) என்பவரிடம் விற்றதாக கூறியுள்ளனர். திருட்டுப் பொருட்கள் என்பதை அறியாமல் வாங்கியதாக திலகராஜ் போலீஸாரிடம் கூறி பின் தன் வாங்கிய பொருட்களில் மரக்கட்டில்கள் மற்றும் இதர பொருட்கள் சிலவற்றையும் ஒப்படைத்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் குமார், ராமு மற்றும் சுரேஷ் ஆகியோர் மீது அசோக் நகர், குமரன் நகர் கிண்டி சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட சஞ்சய் குமார், ராமு, சுரேஷ் ஆகியோரை சிறையில் அடைத்த விருகம்பாக்கம் போலீசார். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ரொசாரியோ (எ) சின்ன ராஜா  என்பவரை தேடி வருகின்றனர்.
Published by:Ramprasath H
First published:

Tags: Cannabis, Chennai, Crime News, Theft

அடுத்த செய்தி