முகப்பு /செய்தி /சென்னை / கடன் வாங்கி தருவதாக பணம் நகைகள் சுருட்டல்.. பெண்களை குறிவைத்து இன்ஸ்டாவில் மோசடி - சென்னையில் சிக்கிய இளைஞர்

கடன் வாங்கி தருவதாக பணம் நகைகள் சுருட்டல்.. பெண்களை குறிவைத்து இன்ஸ்டாவில் மோசடி - சென்னையில் சிக்கிய இளைஞர்

கைதான மகேஷ்குமார்

கைதான மகேஷ்குமார்

Chennai crime news: இன்ஸ்டாகிராமில் பழகி பலரிடம் மோசடி செய்த மகேஷ் குமார் என்ற இளைஞரை கொடுங்கையூர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

“ஒருத்தனோட ஆசைய தூண்டனும், அப்போ தான் அவன ஈஸியா ஏமாத்த முடியும்..!” சதுரங்கவேட்டை படத்துல காந்திபாபு பாத்திரத்தில் நடிகர் நட்டி பேசும் ‘நச்’ வசனம் இது. இந்த இன்டர்நெட் யுகத்தில் நாளுக்கு  நாள் வித்தியாசமான மோசடிகள் அரங்கேறிய வருகிறது மக்கள் ஜாக்கிரதையாக இருக்கனும் என காவல்துறை எச்சரித்தும் ஆசைவார்த்தைகளை நம்பி மக்கள் ஏமாறுவது தொடர்கதையாகி வருகிறது. சென்னை கொடுங்கையூரை சேர்ந்த மகேஷ் குமார் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி கடன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி பெண்கள் உட்பட பலரை ஏமாற்றி  ரூ 40,00,000வரை மோசடி செய்து இப்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் சித்ரா (வயது 27). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இன்ஸ்டாகிராம் மூலம் மகேஷ் குமார் கடந்தாண்டு நவம்பர் மாதம் அறிமுகமாகியுள்ளார். சித்ராவுக்கு அப்போது பணத்தேவை இருந்ததால் வங்கிகளில் கடன் பெறுவதற்கு முயற்சித்து வந்துள்ளார். நான் வங்கியில் தான் வேலை செய்கிறேன் உங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருகிறேன் என நம்பவைத்துள்ளார்.

இதனை நம்பிய அந்தப்பெண் 4சவரன் நகைகள், ரூ.3,00,000 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். நீண்ட நாள்களாகியும் மகேஷ் கடன் வாங்கி தராததால் தான் கொடுத்த பணத்தையும் நகைகளையும் கேட்டுள்ளார். ஆனால் மகேஷ் குமாரோ காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில் மகேஷ் மீது சந்தேகமடைந்து கொடுங்கையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் அந்தப்பெண் கொடுத்த ஆவணங்களை சரிபார்த்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அதிர்ச்சி தகவல்

அதன் பேரில் கேளம்பாக்கம் மெயின்ரோடு அரசுப்பள்ளி தெரு பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமாரை நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. இன்ஸ்டாகிராம் மூலம் யார் யாரெல்லாம் கடன் குறித்த தகவல்களை தேடுகிறார்களோ அவர்களை டார்கெட் செய்துள்ளார். அந்த நபர்களை தொடர்புக்கொண்டு பல வங்கிகளில் வேலை செய்து வருவதாக கூறி நம்ப வைத்து பல பேரிடம் பணத்தை வாங்கியுள்ளார்.

Also Read:  அரசுப்பள்ளி ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு..  துண்டான விரல்கள் - கோவில்பட்டியில் பயங்கரம்

சித்ராவை போலவே ப்ரீத்தி என்பவரிடம் ஐந்து சவரம் நகை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளார் இதேபோன்று தனக்குத் தெரிந்த பல பேரிடம் 40 லட்சம் ரூபாய் வரை மகேஷ் குமார் மோசடி செய்து பணம் மற்றும் நகைகளை வாங்கி உள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் முதலீடு

மோசடி செய்த பணத்தில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் பணத்தை இரட்டிப்பாக்கம் தொழிலில் முதலீடு செய்து நஷ்டம் அடைந்துள்ளார். மேலும் சில லட்சங்களை தங்கத்தில் முதலீடு செய்து மகேஷ் குமார் நஷ்டம் அடைந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. பல பேரிடம் மோசடி செய்த மகேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: அசோக் குமார் 

First published:

Tags: Cheating, Chennai, Crime News, Instagram, Local News, Money