Home /News /chennai /

சென்னையில் வாலிபர் ஓடஓட வெட்டிப் படுகொலை - பழிக்குப்பழி சம்பவம்

சென்னையில் வாலிபர் ஓடஓட வெட்டிப் படுகொலை - பழிக்குப்பழி சம்பவம்

சென்னையில் வாலிபர் கொலை

சென்னையில் வாலிபர் கொலை

Crime : இளைஞர் கொலையில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் நுங்கம்பாக்கம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
சென்னை நுங்கம்பாக்கம் குளக்கரை குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் குள்ள குமார் (எ) குமார்( வயது 22). இவர் மேல் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன.  குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சாம்பார் (எ) தனசேகரை கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் சிறை சென்று வெளியே வந்தள்ளார்.

இந்தச் சம்பவத்துக்கு பழிக்கு பழியாக குள்ள குமாரை தீர்த்து கட்டுவதற்காக சாம்பார் (எ) தனசேகர்  அவரது நண்பர்கள் சங்கு பார்த்திபன் மற்றும் ராஜா ஆகியோருடன் சேர்ந்து நேற்று மாலை 6 மணி அளவில் நுங்கம்பாக்கம் குளக்கரைச் சாலையில் உள்ள தேநீர் கடையில் நின்று கொண்டிருந்தனர்.  தனசேகர் மற்றும் அவரது இரு நண்பர்களும் குள்ள குமாரை அருவாள் மற்றும் பட்டா கத்தி உள்ளிட்ட  ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் தலை, கை என பல்வேறு பகுதிகள் சிதைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் குமார் சரிந்துள்ளார். இதைக்கண்டு அப்பகுதிவாசிகள்  நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த நுங்கம்பாக்கம் காவல் துறையினர் ரத்த வெள்ளத்தில் மயக்க நிலையில் இருந்த குள்ள குமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு குள்ள குமார் உயிர் இழந்தார்.

Also Read:  சென்னையில் ஒரே வாரத்தில் 2வது சம்பவம்.. நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை

இதனிடைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது  சாம்பார் (எ) தனசேகர்  அவரது நண்பர்கள் பார்த்திபன்  மற்றும் ராஜா ஆகிய மூவரும் தப்பிச்செல்ல ஆட்டோவில் தயாராக இருந்த போது சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் மூன்று மாதங்களுக்கு முன் குள்ள குமார், தனது இடதுகையில் இதயத்திற்கு மேலே கத்தியால் குத்தியதற்காக பழிக்கு பழி வாங்கியதாக சாம்பார் என்கிற தனசேகர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த சம்பவத்தின் போது தனசேகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்பதும் போலீசார் தன்னிச்சையாக வழக்கு பதிவு செய்து குள்ள குமாரை சிறையில் அடைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் குள்ள குமார் 15 நாட்களுக்கு முன்பே சிறையில் இருந்து வெளிவந்து தற்போது தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தான் நேற்று மாலை தனது வீட்டு அருகே டீ குடித்துக் கொண்டிருந்த குள்ள குமாரை அதே பகுதியைச் சேர்ந்த சாம்பார் (எ)தனசேகர் மற்றும் அவரது நண்பர்கள் சராமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் நுங்கம்பாக்கம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Ramprasath H
First published:

Tags: Chennai, Murder, Police, Tamil News

அடுத்த செய்தி