Home /News /chennai /

செய்யாத குற்றத்துக்கு முட்டிப்போட வைத்து தண்டனை.. இளைஞர் தற்கொலையின் பகீர் பின்னணி

செய்யாத குற்றத்துக்கு முட்டிப்போட வைத்து தண்டனை.. இளைஞர் தற்கொலையின் பகீர் பின்னணி

தற்கொலை செய்துக் கொண்ட இளைஞர் - விஜய்

தற்கொலை செய்துக் கொண்ட இளைஞர் - விஜய்

Chennai | இளைஞர் தற்கொலை சம்பவத்தில் திடீர் திருப்பம். அனைவர் முன்னிலையிலும் முட்டி போட வைத்து அசிங்கப்படுத்திய நிறுவன ஜி.எம் மட்டுமே தனது தற்கொலைக்கு காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை. கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி தெரு பகுதியை சேர்ந்தவர் கலா. இவர் 98 வது வார்டில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 24 வயதில் விஜய் என்ற மகன் இருந்து வந்துள்ளார். கலாவின் கணவர் பாலாஜி நான்கு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் தனது இளைய மகனான விஜயை மிகவும் பாசமாக வளர்த்து வந்துள்ளார்.

பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த விஜய் குடும்ப சூழ்நிலை காரணமாக அயனாவரத்தில் உள்ள ஹோண்டா சர்வீஸ் சென்டரில் சில ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி வியாசர்பாடி பகுதிக்கு பணிக்கு சென்ற கலா மாலை வீடு திரும்பிய போது வீட்டின் கதவுகள் உள்பக்கமாக பூட்டி இருந்தது. பலமுறை கதவு தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த கலா அக்கம்பக்கத்தினரை அழைத்து வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அங்கு விஜய் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து கலா அதிர்ச்சடைந்துள்ளார். பின் தகவலின் பெயரில் அயனாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து உடற்கூராய்வுக்காக விஜயின் உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Also see... கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக திமுகவை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் விஜய் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாருக்கு கிடைத்தது.
அந்தக் கடிதத்தில், "தான் பணிபுரியும் ஹோண்டா சர்வீஸ் சென்டரில் ஒரு பொருள் காணாமல் போனதாகவும் அந்த பொருளை தான் எடுத்ததாகவும் கூறி நிறுவனத்தின் ஜி எம் சுனில் என்பவர் தன்னை அனைவரின் முன்னிலையிலும் முட்டி போட செய்து அசிங்கப்படுத்தியதாகவும் அதனால் தற்கொலை செய்து கொள்வதாகவும்" விஜய் குறிப்பிட்டுள்ளார்.

"தனது தற்கொலைக்கு நிறுவன ஜிஎம் சுனில் மட்டுமே காரணம்" எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், "ஐ லவ் யூ கலா அம்மா" எனவும் உருக்கமாக எழுதி வைத்துள்ளார். இதனையடுத்து கடிதத்தை கைப்பற்றிய அயனாவரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Chennai, Commit suicide, Crime News, Student

அடுத்த செய்தி