ஹோம் /நியூஸ் /சென்னை /

மாவா விற்பதை போலீசில் போட்டு கொடுத்தவர் மீது கொடூர தாக்குதல்... சென்னையில் பயங்கரம்!

மாவா விற்பதை போலீசில் போட்டு கொடுத்தவர் மீது கொடூர தாக்குதல்... சென்னையில் பயங்கரம்!

பாதிக்கப்பட்ட இளைஞர்

பாதிக்கப்பட்ட இளைஞர்

Chennai attack | மாவா விற்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கொடுத்த நபருக்கு அடுத்த சில மணி நேரம் முதலே தொடர் மிரட்டல்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai

சென்னையில், மாவா விற்பதாக காவல் கட்டுப்பட்டறைக்கு தகவல் தெரிவித்த நபரை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கிய மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை கொருக்குப்பேட்டை ஜே.ஜே. நகர் பகுதியை சேர்ந்த  பிரவீன் (28) வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர் வசிக்கும் அந்தப் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் மாவா பொருட்கள் சரளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பிரவீன் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு  தகவல் தெரிவித்த சில மணி நேரத்திலேயே மாவா விற்கப்படும் நபர் ஒருவர் பிரவீன் வீட்டிற்கு நேரடியாக சென்று மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க | மனைவியை 50 துண்டுகளாக வெட்டி ஆங்காங்கே வீசிய கணவன்.. டெல்லியை மிஞ்சிய ஷாக் சம்பவம்!

இந்த நிலையில் மீண்டும் நேற்று காலை முதலே அடியாட்கள் பல பேர் வந்து மிரட்டி உள்ளனர். தொடர்ந்து நேற்று மதியம் மர்ம நபர்கள் சிலர் உருட்டு கட்டையால் பிரிவினை சரமாரியாக  தாக்கி உள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த பிரவீன், சென்னை  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: அசோக்குமார், திருவொற்றியூர்

First published:

Tags: Attack, Chennai