ஹோம் /நியூஸ் /சென்னை /

திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திகுத்து.. கள்ளக்காதலன் வெறிச்செயல்

திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திகுத்து.. கள்ளக்காதலன் வெறிச்செயல்

இளம்பெண்ணுக்கு கத்தி குத்து

இளம்பெண்ணுக்கு கத்தி குத்து

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி கேட்டும் மறுப்பு தெரிவித்ததால் வெறிச்செயல்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu | Chennai [Madras] | Chennai

  சென்னையில் திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். 

  சென்னை அமைந்தகரை அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஏழுமலை(33) கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த இவருக்கும் கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வந்த அதே பகுதியை சேர்ந்த அம்மு(27) என்ற இளம்பெண்ணுக்கும் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது.

  இதனை தொடர்ந்து இருவரும் ஒன்றாக வீடு எடுத்து கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர்.

  இந்த நிலையில், ஏழுமலை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி அம்முவிடம் கேட்டு வந்துள்ளார். இதற்கு அம்மு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததால் ஆத்திரத்தில் கத்தியால் அம்முவின் கை, கால், முகம் என அனைத்து இடங்களிலும் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

  ALSO READ | சித்ரா வழக்கில் திருப்பம்! குற்றம்சாட்டும் கணவர்..நியூஸ் 18க்கு பிரத்யேக பேட்டி..

  அம்முவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த அம்முவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கள்ளக்காதலன் ஏழுமலையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Attempt murder case, Chennai, Crime News, Illegal affair