ஹோம் /நியூஸ் /சென்னை /

கர்ப்பிணி பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்.. பெற்ற தாயையும் விட்டுவைக்காத கொடூரம் - சென்னையில் அதிர்ச்சி

கர்ப்பிணி பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்.. பெற்ற தாயையும் விட்டுவைக்காத கொடூரம் - சென்னையில் அதிர்ச்சி

மாதிரி படம்

மாதிரி படம்

கர்ப்பிணி பெண் ஒருவர் குளிக்கும் போது வீடியோ எடுத்து கொண்டிருந்த அவர் கையும் களவுமாக சிக்கி கொண்டார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai

சென்னையில், கர்ப்பிணி பெண் குளிக்கும்போது வீடியோ பதிவு செய்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்த 24 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் குளிக்கும் போது ஜன்னலில் இருந்து மர்ம நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இதனை கண்ட இளம் பெண்ணின் கணவர் அந்த நபரை மடக்கி பிடித்து குமரன் நகர் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் ஸ்ரீராம் என்றும், கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் எக்ஸிக்யூட்டிவாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

தொடர்ந்து அவரது செல்போனை வாங்கி போலீசார் ஆய்வு செய்தனர். அதில், பல பெண்கள் குளிக்கும் வீடியோக்கள் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவரது சொந்த தாய் குளிக்கும் வீடியோவும் அதில் பதிவாகியிருந்தது.  இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், வீடியோ பதிவுகளை வைத்து என்ன செய்கிறார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Arrest, Chennai, Crime News