ஹோம் /நியூஸ் /சென்னை /

காதலிக்கு பிறந்தநாள் கிஃப்ட்.. மதில் ஏறிக்குதித்து நாய்க்குட்டி திருடிய காதலன்!

காதலிக்கு பிறந்தநாள் கிஃப்ட்.. மதில் ஏறிக்குதித்து நாய்க்குட்டி திருடிய காதலன்!

நாய்க்குட்டி திருட்டு

நாய்க்குட்டி திருட்டு

காதலிக்காக விலை உயர்ந்த நாய்க்குட்டியை பரிசளிக்க நினைத்த அவர், பேட்டரியை திருடும் போது அங்கிருந்த நாய்க்குட்டியையும் திருடி சென்றுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras] | Chennai | Tamil Nadu

  சென்னையில் காதலிக்கு பரிசளிப்பதற்காக விலை உயர்ந்த நாய்குட்டியை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

  சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம் பகுதியில் வீடுகளின் முன்பு அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் நிறுத்தி இருக்கும் பைக்குகளில் அடிக்கடி பேட்டரிகள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.

  இதன் தொடர்ச்சியாக விருகம்பாக்கத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் இருந்த விலை உயர்ந்த நாய்க்குட்டியை மர்மநபர் ஒருவர் திருடி சென்று விட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

  அதில், பைக்குளில் பேட்டரிகளை திருடியதும், நாய்க்குட்டியை திருடியது ஒரே நபர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் பெயர் சுஜித் (22) என்பதும், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

  இதையும் படிங்க | நாக்காலேயே ஓவியம் வரையும் நாய்.. ஆர்டிஸ்ட்டாக மாறிய கோபக்கார பிட்புல்.!

  தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், கொள்ளை சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், தனது அலுவலகத்துக்கு சொந்தமான மின்சார ஸ்கூட்டர்களில் மட்டும் பேட்டரிகளை திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும், அப்படி திருட சென்ற போது காதலிக்கு பரிசளிப்பதற்காக அங்கிருந்த நாய்க்குட்டியையும் சேர்த்து திருடி விட்டதாக தெரிவித்துள்ளார்.

  இதையடுத்து, அவரிடம் இருந்த 2 இருசக்கர வாகனங்கள், பேட்டரிகள் மற்றும் நாய்க்குட்டியை பறிமுதல் செய்து, நாய்க்குட்டியை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chennai, Theft