முகப்பு /செய்தி /சென்னை / சென்னை : திருமணத்திற்கு சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு..

சென்னை : திருமணத்திற்கு சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு..

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சென்னை மாங்காட்டில் திருமணத்திற்கு சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு சென்ற நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை , ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதா( வயது 53). கெருகம்பாக்கத்தில் நடந்த உறவினர் திருமணத்துக்காக சென்றுள்ளார். திருமண மண்பபத்தை நோக்கி நடந்து சென்றுக்கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இருவர் ராதா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கநகையை பறித்து செல்ல முயன்றுள்ளனர்.

மர்மநபர்கள் செயின் பறிப்பதை அறிந்த ராதா தான் அணிந்திருந்த நகையை இறுக்கமாக பிடித்துள்ளார். இதில் கொள்ளையர்கள் கைகளில் பாதி செயின் சென்றது. ராதாவின் கைகளில் அறுந்த மீது செயின் இருந்துள்ளது. ராதா கூச்சலிட்டதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து மாயமாகினார்.

இதனையடுத்து திருமண மண்டபத்திற்கு சென்று உறவினர்களிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனையடுத்து உறவினர்கள் உதவியோடு சம்பவம் குறித்து மாங்காடு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

First published:

Tags: Chain Snatching, Crime News, Tamil News