முகப்பு /செய்தி /Chennai / சென்னை டூ விழுப்புரம் அரசுப் பேருந்தில் மதுபோதை பயணி தாக்கி கண்டக்டர் பலி... ஓடும் பேருந்தில் பயங்கரம்..

சென்னை டூ விழுப்புரம் அரசுப் பேருந்தில் மதுபோதை பயணி தாக்கி கண்டக்டர் பலி... ஓடும் பேருந்தில் பயங்கரம்..

பேருந்து நடத்துனர் அடித்துக்கொலை

பேருந்து நடத்துனர் அடித்துக்கொலை

மதுபோதையில் சண்டையில் பயணி நடத்துனரை தாக்கியதில் காயம் அடைந்த நடத்துனர் மேல்மருவத்தூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லும் வழியில் பலியானார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் மதுபோதையில்  தகராறில் ஈடுபட்ட பயணி தாக்கியதில், பேருந்து நடத்துனர் உயிரிழந்தார்.

சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று மேல்மருவத்தூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது, நடத்துனருக்கும் , பயணி ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பேருந்தில் நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்ட பயணி மதுபோதையில் இருந்துள்ளார். சண்டையில் பயணி  தாக்கியதில் காயம் அடைந்த நடத்துனர் மேல்மருவத்தூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார்.  உயிரிழந்த நடத்துனர் பெருமாள், கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர். அவருக்கு வயது 54.

இச்சம்பவம் தொடர்பாக மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Chennai, Crime News, Kallakurichi, Tasmac