Home /News /chennai /

சென்னையில் ஒரே வாரத்தில் 2வது சம்பவம்.. நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை

சென்னையில் ஒரே வாரத்தில் 2வது சம்பவம்.. நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நேற்று பிற்பகல் 3 மணி அளவில் பைனான்ஸ் நிறுவனத்திற்கு முகமூடியுடன் நுழைந்த 8 பேர் அங்குள்ள ஊழியர்களை கட்டிப்போட்டுவிட்டு 30 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னை வடபழனியில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்திற்குள் நுழைந்து ஊழியர்களை கட்டிப்போட்டு 30 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    வடபழனி திருநகர் பகுதியில் உள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என்பவர் ஓசோன் கேபிடல் என்ற பைனான்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிறுவனத்தை நடத்தி வரும் அவர், பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.

    இந்நிலையில், நேற்று பிற்பகல் 3 மணி அளவில் இந்த பைனான்ஸ் நிறுவனத்திற்கு முகமூடியுடன் நுழைந்த 8 பேர் அங்குள்ள ஊழியர்களை கட்டிப்போட்டுவிட்டு 30 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அப்போது, எதிர் வீட்டில் இருந்த சரவணன் ஊழியர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த கொள்ளையர்களை விரட்டி சென்ற நிலையில், சையது ரியாஸ் என்பவர் பிடிப்பட்டார்.

    பின்னர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த போலீசார் சையது ரியாஸை கைது செய்ததுடன் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த இஸ்மாயில், பரத், கிஷோர், ஜானி, தமிழ், மொட்டை உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். மேலும், அவர்கள் ஆந்திரா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கூறப்படும் நிலையில், 5 தனிப்படை அமைத்து விசாரிக்கப்படுகிறது. சிசிடிவி காட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: சென்னை வடபழனியில் அடுத்தடுத்து சிலிண்டர் வெடித்து விபத்து - போலீசார் விசாரணை

    கடந்த 13ம் தேதி அரும்பாக்கத்தில் உள்ள வங்கியில் இருந்து 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் ஈடுபட்டவர்களில் முக்கிய நபர்களை போலீசார் கைது செய்து பெரும்பாலான நகைகளை மீட்டுள்ளனர். இந்நிலையில், ஒரே வாரத்தில் சென்னையில் மீண்டும் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Chennai, Robbery

    அடுத்த செய்தி