Home /News /chennai /

அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு இலக்கு நிர்ணயம்: சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவு

அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு இலக்கு நிர்ணயம்: சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பேருந்துகளில் செய்யப்படும் விளம்பரங்கள் மூலமாக 3 கோடியே 40 லட்சம் ரூபாய் கிடைக்கும் நிலையில், மீதமுள்ள 6 கோடியே 60 லட்சம் ரூபாயை பயணிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட் மூலமாகவே வசூலிக்க வேண்டும் என ஓட்டுநர், நடத்துநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு இலக்கு நிர்ணயித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் சுமார் 1.25 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் தங்களுக்கு  ஊதிய உயர்வு கோரி தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு  14 ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.14வது ஊதிய பேச்சுவார்த்தையின் படியும், அகவிலைப்படி உயர்வு காரணமாகவும், மாநகர போக்குவரத்துக்கு கழகத்திற்கான தேவை மாதத்திற்கு 10 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

    பேருந்துகளில் செய்யப்படும் விளம்பரங்கள் மூலமாக 3 கோடியே 40 லட்சம் ரூபாய் கிடைக்கும் நிலையில், மீதமுள்ள 6 கோடியே 60 லட்சம் ரூபாயை பயணிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட் மூலமாகவே வசூலிக்க வேண்டும் என ஓட்டுநர், நடத்துநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: Swiggy, Zomato போன்ற டெலிவரி நிறுவனங்களால் ஆபத்தா? அதிர்ச்சி தகவல்..!

    பேருந்துகளில் முழுமையான அளவு பயணிகளை ஏற்றிச் சென்று கட்டணங்களை வசூல் செய்து வருவாயை அதிகரிக்கவும்  நிதிச்சுமையை குறைக்கவும் போக்குவரத்து ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து மண்டல மேலாளர்களும் இந்த உத்தரவை பின்பற்றுமாறு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Chennai, Govt Bus, Transport

    அடுத்த செய்தி