புதிய அபாரத தொகை நடைமுறைக்கு வந்த பிறகு சென்னையில் போக்குவரத்து வீதிமீறல் வழக்குகள் 50 சதவீத்திற்கும் கீழாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில், திருத்தி அமைக்கப்பட்ட போக்குவரத்து சட்டத்தின்படி, உயர்த்தப்பட்ட புதிய அபராதத் தொகை வசூலிக்கும் முறை கடந்த அக்டோபர் 26-ம் தேதி சென்னையில் அமலுக்கு வந்தது.
அதன்படி, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமன்றி, அவர்களுடன் பயணிக்கும் நண்பர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வாடகை கார், ஆட்டோக்களில் பயணிப்பவர்களுக்கு பொருந்தாது.
ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அரசின் அவசர போக்குவரத்திற்கு வழி விடாத நபர்களிடமிருந்து ரூ. 10,000 அபராதம் வசூலிக்கப்படும். இதேபோல், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கான அபராதத் தொகை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல சட்டங்கள் புதிதாக அமலுக்கு வந்துள்ளது. அதன்படி விதிமீறலில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் உதயநிதி ஆய்வு... மகளிர் சுய உதவி குழுக்களை அதிகரிக்க வலியுறுத்தல்!
இந்நிலையில், அபராத தொகை உயர்வுக்கு முன் தினசரி 8,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், தற்போது அவை 3,500 வழக்குகளாக குறைந்துள்ளதாகவும் போக்குவரத்து போலீசார் கூறியுள்ளனர்.
மேலும், கால் சென்டர்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு அபராத தொகை உடனடியாக வசூலிக்கப்படுவதாகவும் போக்குவரத்து போலீசார் கூறினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai Police, Chennai Traffic, Traffic Rules, Violation