சென்னையில் மதுபோதையில் வாகனங்கள் ஓட்டுவதால் சாலை விபத்துகள் ஏற்படுகிறது. இதனைத் தடுப்பதற்காக சென்னை பெருநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், மதுபோதையில் வாகனம் ஓட்டினால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அப்படி அபராதம் விதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் அதனை சரியாக செலுத்தவில்லை என்றால் அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபோதையில் சாலையில் வாகனம் ஓட்டுபவர்களை தடுக்கும் வகையில் சென்னை பெருநகர காவல்துறை தீவிரமாக ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். கடந்த 3 வாரங்களாக மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து 2 கோடியே 60 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இதற்காக அமையப்பெற்றுள்ள 10 கால் சென்டர்கள் மூலம் நேரில் வரவழைக்கப்பட்டு இணையதளம் மூலமாக பணம் பெறப்படுகிறது. அதன்படி, கடந்த 3 வாரங்களில் மட்டும் இந்த கால் சென்டர்கள் வாயிலாக 2,521 மது போதை வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன.
மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனங்கள் மட்டுமின்றி அசையும் சொத்துகள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Drunk an drive, Traffic Police, Traffic Rules