முகப்பு /செய்தி /சென்னை / வாகன ஓட்டிகளே உஷார்... நம்பர் பிளேட் இப்படி இருந்தா அபராதம்.. எச்சரிக்கை விடுத்த போக்குவரத்து போலீசார்!

வாகன ஓட்டிகளே உஷார்... நம்பர் பிளேட் இப்படி இருந்தா அபராதம்.. எச்சரிக்கை விடுத்த போக்குவரத்து போலீசார்!

போக்குவரத்து காவல்துறை

போக்குவரத்து காவல்துறை

சென்னையில் 138 வாகன உதிரிபாகங்களை விற்பனை செய்யும் கடைகளை போக்குவரத்து அதிகாரிகள் சோதனையிட்டனர். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் விதிகளை மீறி டிசைன்கள் கொண்ட வாகன நம்பர் பிளேட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்தில் அமலுக்கு வந்த மோட்டார் வாகனச் சட்ட விதிகளின்படி  அபராத தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது. நம்பர் பிளேட்டுகளில் பதிவு எண்களை அரசு நிர்ணையித்த ஃபாண்டில் எழுதியிருக்க வேண்டும். ஆனால் சிலர் தங்கள் விருப்பத்துக்கேற்ப நம்பர் பிளேட்டுகளில் டிசைன் டிசைனாக எண்களை ஒட்டிக்கொள்கின்றனர். மேலும் நம்பர் பிளேட்டில் வேறு எழுத்துக்கள், படங்கள் உள்ளிட்டவைகளையும் அச்சிட்டு பல்வேறு விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த விதிமீறல்களைத் தடுக்கவும் வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கடந்த பிப்.13-ம் தேதி போக்குவரத்து போலீஸார் சிறப்பு வாகன சோதனை மேற்கொண்டனர். விதி மீறலில் செய்யப்பட்டுள்ள நம்பர் பிளேட்டுகள் வைத்திருந்த வாகனங்களைக் கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் சரியான நம்பர் பிளேட்டுகளை பொருத்துமாறு அறிவுறுத்தினர்.

இந்நிலையில் தற்போது சட்டவிதிகளுக்கு எதிராக விதிகளை மீறி வாகன நம்பர் பிளேட்டுகளை டிசைனாக தயாரித்து விற்கும் கடைகளுக்கு போக்குவரத்து ஆய்வாளர்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்து எச்சரித்தனர். நம்பர் பிளேட்டுகளுக்கான விதிமுறைகளை எடுத்துரைத்து அதன்படி மட்டுமே அச்சிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 138 வாகன உதிரிபாகங்களை விற்பனை செய்யும் கடைகளை போக்குவரத்து அதிகாரிகள் சோதனையிட்டனர். புதுப்பேட்டை போன்ற முக்கிய இடங்களில் போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் நேரில் சென்று வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

First published:

Tags: Chennai, Chennai Traffic, Traffic Police