முகப்பு /செய்தி /சென்னை / சென்னை மக்களே உஷார்! புது ரூல்.. 80 இடங்களில் வாகன சோதனை.. நாளை முதல் அபராதம்!

சென்னை மக்களே உஷார்! புது ரூல்.. 80 இடங்களில் வாகன சோதனை.. நாளை முதல் அபராதம்!

டிராபிக் போலீஸ்

டிராபிக் போலீஸ்

நாளை முதல் சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறும் குற்றத்திற்காக மோட்டார் வாகன சட்டத்தின்படி புதிய அபராத தொகை வசூலிக்கப்படும்

  • Last Updated :
  • Chennai, India

போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாக நாளை சென்னையில் 80 இடங்களில், போக்குவரத்து போலீசார் சோதனை நடத்தி புதிய அபராத தொகையை விதிக்க முடிவு செய்துள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டதிருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன் படி போக்குவரத்து விதிமுறைகளை மீறிவதற்காக விதிக்கப்படும் அபராத தொகை மாற்றி அமைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசும் புதிய அபராத தொகையை வசூலிக்க கடந்த 19ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து சென்னை பெருநகர காவல் துறையும் புதிய அபராத தொகை வசூலிக்கப்படும் என அறிவித்தது. இந்நிலையில் விதிமீறல்களுக்கான அதிகரிக்கப்பட்ட அபராத தொகையினை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை, அதன் சர்வெரில் அப்டேட் செய்துவிட்டது.

இதையும் வாசிக்க: பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கிய முதல்வர்: இணையத்தில் வைரலாகும் வீடியோ! 

எனவே நாளை முதல் சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறும் குற்றத்திற்காக மோட்டார் வாகன சட்டத்தின்படி புதிய அபராத தொகை வசூலிக்கப்படும்.

வ. எண்விதிமீறல்பழைய அபராத தொகைபுதிய அபராத தொகை
12 சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களில் வேகமாக செல்வதுரூ. 400ரூ. 1000( முதல் முறைரூ 10,000 (ஒரு முறைக்கு மேல்)
22 சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்குவதுரூ. 1000ரூ. 1000 - ரூ. 10,000 வரை
32 சக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகன பந்தயத்தில் (Race) ஈடுபடுவதுரூ. 1000 - ரூ. 1500ரூ. 15,000 (முதல் முறை)ரூ.25,000 (ஒரு முறைக்கு மேல்)
42 சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களில் சைலன்சர் மாடிஃபிகேஷன்ரூ. 100ரூ.1000
5சிக்னல் விதிமீறல்ரூ. 100ரூ. 500 - ரூ. 1500
6நிறுத்தற் கோடுகள் விதிமீறல்ரூ. 100ரூ. 500 - ரூ.1500
7உடல் மற்றும் மனதளவில் வாகனங்களை இயக்க தகுதியற்றவர்கள் ரூ. 200ரூ. 1000 - ரூ. 2000
8மியூசிக்கல் ஹாரன் மற்றும் ஏர் ஹாரன்ரூ. 100ரூ. 500
9வாகன பதிவு (Registration) இல்லாமல் வாகனம் இயக்குவதுரூ. 2500ரூ. 2500 - ரூ. 5000
10லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் இயக்குவது. ரூ. 2500ரூ. 5000
11போன் பேசிக் கொண்டே வாகனங்கள் இயக்குவதுரூ. 1000ரூ.1000 (முதல்முறை)ரூ.10,000 (ஒருமுறைக்கு மேல்)
12கார் மற்றும் கனரக வாகனங்களால் காற்று மாசுரூ. 1000ரூ.10,000
132 சக்கர வாகன இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் இயக்குவதுரூ. 700ரூ.2,000 - ரூ.4,000
14ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனம் ஓட்டுவதுரூ. 100ரூ. 500
15பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியாமல் செல்வதுரூ. 100ரூ. 500
16மது குடித்து வாகனம் ஓட்டுவதுரூ. 10,000ரூ. 10,000

மேலும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து ஒத்துழைப்பு தருமாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

First published:

Tags: Chennai Police, Traffic Rules