ஹோம் /நியூஸ் /சென்னை /

போலீஸ் வாகனத்திற்கே அபராதம் விதித்த போக்குவரத்து துறை... இணையத்தில் வைரலாகும் ரசீது!

போலீஸ் வாகனத்திற்கே அபராதம் விதித்த போக்குவரத்து துறை... இணையத்தில் வைரலாகும் ரசீது!

காவல்துறை வாகனத்திற்கு அபராதம்

காவல்துறை வாகனத்திற்கு அபராதம்

வாகன ஓட்டி ஒருவர் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் சென்னை போக்குவரத்து காவல்துறையை டேக் செய்து புகாரளித்திருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

காவல்துறை ரோந்து வாகனத்திற்கு சென்னை போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்த ரசீது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை நுங்கம்பாக்கம் பார்க் நட்சத்திர விடுதி அருகே நேற்று காலை வடபழனி காவல் நிலைய ரோந்து வாகனம் போக்குவரத்து விதியை மீறி வலது புறம் திரும்பியுள்ளது.

வலது புறம் திரும்புதல் தடை செய்யப்பட்ட அந்த இடத்தில் ரோந்து வாகனம் வலது புறம் திரும்பியதை கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் சென்னை போக்குவரத்து காவல்துறையை டேக் செய்து புகாரளித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து சென்னை போக்குவரத்து காவல்துறை அந்த ரோந்து வாகனத்துக்கு அபராதம் விதித்துள்ளது. மேலும், அபராதம் விதிக்கப்பட்ட ரசீதை புகார் தெரிவித்திருந்த நபருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டதாக ட்விட்டரில் பதிலும் அளித்துள்ளது சென்னை போக்குவரத்து காவல்துறை. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

First published:

Tags: Chennai Police, Traffic Police, Twitter