ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் இன்று இங்கெல்லாம் மின் தடை... உங்க ஏரியாவும் இருக்கானு தெரிஞ்சிக்கோங்க..

சென்னையில் இன்று இங்கெல்லாம் மின் தடை... உங்க ஏரியாவும் இருக்கானு தெரிஞ்சிக்கோங்க..

மின்தடை பகுதிகள்

மின்தடை பகுதிகள்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  சென்னையில் இன்று பராமரிப்பு பணி காரணமாக கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இது தொடர்பாக மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் 10.11.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கிண்டி, ஐடி காரிடர், வேளச்சேரி, வியாசர்பாடி, கே.கே நகர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

  மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கிண்டி பகுதி : வாணுவம்பேட்டை சரஸ்வதி நகர் பகுதி, ஏ.ஜி.காலனி, நேதாஜி காலனி, கல்கி நகர், ஆண்டாள் நகர் விரிவு, எம்.ஜி.ஆர் நகர்.ஐடி காரிடர் பகுதி : தரமணி பள்ளி சாலை, அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

  வேளச்சேரி பகுதி : ராம் நகர் 7,8,10,11 மற்றும் 12வது தெரு, விஜயா நகர் 3,4,5வது தெரு, ரோசி பிளாட், பைபாஸ் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

  வியாசர்பாடி பகுதி : ராயபுரம் அண்ணா பூங்கா எம்.சி.ரோடு, சிமென்ட்ரி ரோடு, வெங்கடாச்சலாம் தெரு, மசூதி தெரு, ஆண்டியப்பா முதலி தெரு, ஆதாம் தெரு, மீனாட்சி அம்மன் பேட்டை, வீராசாமி தெரு, வேலாயுதபாண்டியன் தெரு, பஜன கோயில் தெரு, நல்லப்பா வாத்தியார் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

  கே.கே.நகர் பகுதி : விருகம்பாக்கம் இந்திரா நகர், ராஜீவ்காந்தி தெரு, பெரியார் நகர், கண்ணகி தெரு, எம்.ஜி.ஆர் தெரு வளசரவாக்கம் கேசவர்த்தினி, சௌத்திரி நகர் மெயின் ரோடு, பெத்தேனியா நகர், ஆற்காடு ரோடு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

  பெரம்பூர் பகுதி : பேப்பர் மில்ஸ் ரோடு ராஜாபாதர் தெரு, மாதவரம் நெடுஞ்சாலை, பள்ளிசாலை பகுதி, சுப்ரமணியன் சாலை பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Chennai, Chennai power cut