ஹோம் /நியூஸ் /சென்னை /

கடும் பனிமூட்டத்தால் ரயில்கள் தாமதம்.! படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கும் பயணிகள்!

கடும் பனிமூட்டத்தால் ரயில்கள் தாமதம்.! படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கும் பயணிகள்!

பனிமூட்டத்தில் ரயில்

பனிமூட்டத்தில் ரயில்

Electric train late | ரயில்கள் குறைவாகவும் 10 நிமிடம் தாமதமாகவும் இயக்கப்படுவதால் பயணிகள் அவதி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai | Thiruvallur

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர், திருவலங்காடு, திருத்தணி ஆகிய பகுதிகளில் கடுமையான பனி மூட்டம் நிலவுவதால் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் சென்னை - அரக்கோணம் ரயில் மார்க்கத்திலிருந்து இயக்கப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாகவே செல்கின்றன.இதனால் குறைந்த அளவிலான ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

ரயில்

இதனால் பயணிகள் வரும் ரயில்களில் அடித்து புடித்து ஏறி பயணம் செல்கின்றனர். சென்னையின் புறநகர் பகுதியான திருத்தணி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் கூட்ட நெரிசல் காரணமாக ரயில் படிக்கட்டுகளில் தொங்கியபடி அதிகப்படியான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

ALSO READ | 3 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம்.. முதல்வர் ஸ்டாலினின் பயணத்திட்டம் இதுதான்

ரயில்கள் குறைவாகவும் 10 நிமிடம் தாமதமாகவும் இயக்கப்படுவதால் அதிகப்படியான பயணிகள் கிடைத்த ரயிலில் பயணம் செய்கின்றனர். இதன் காரணமாக வேலைக்கு செல்லும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

First published:

Tags: Chennai, Electric Train, Thiruvallur