ஹோம் /நியூஸ் /சென்னை /

வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுமி பலி.. தவறான சிகிச்சை காரணமா?

வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுமி பலி.. தவறான சிகிச்சை காரணமா?

கோப்பு படம்

கோப்பு படம்

பிரேதப் பரிசோதனைக்கு பிறகே சிறுமியின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னை மன்னடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.  தவறான ஊசி செலுத்தியது தான் சிறுமி உயிரிழப்புக்கு காரணம் என அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். 

  சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ், வசந்தி தம்பதியினரின் ஒரே மகள் நந்தினி(15), பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அவர் கடந்த வியாழக்கிழமை அன்று வயிற்று வலி காரணமாக மன்னடி பகுதியில் உள்ள நேசனல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமிக்கு வயிற்றில் சிறு புண் இருப்பதாகவும் அல்சர் பிரச்சனை இருப்பதாக கூறி மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். நேற்று இரவு சிறுமிக்கு புதிதாக ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவசர சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

  இதனையடுத்து தன் மகளுக்கு தவறான ஊசியை மருத்துவமனை நிர்வாகம் செலுத்தியதை அடுத்து தான் அவர் உயிர் இழந்ததாக கூறி  பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு கடற்கரை போலீசார், உறவினர்கள் மற்றும் பெற்றோர் பேசி சிறுமியின் உடலை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

  இந்நிலையில் பிரேதப் பரிசோதனைக்கு பிறகே சிறுமியின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

  ரமேஷ், வசந்தி தம்பதியினருக்கு  திருமணமாகி 6 வருடங்கள் கழித்தே சிறுமி நந்தினி பிறந்த நிலையில், அவர் உயிரிழந்த துக்கம் தாளாமல் பெற்றோர்கள், உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் புரண்டு அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Children death, Hospital