ஹோம் /நியூஸ் /சென்னை /

கெத்து காட்டுவதாக கத்தியை தீட்டி பேருந்தில் ரகளை.. கம்பி எண்ணும் கல்லூரி மாணவர்கள்

கெத்து காட்டுவதாக கத்தியை தீட்டி பேருந்தில் ரகளை.. கம்பி எண்ணும் கல்லூரி மாணவர்கள்

சென்னை

சென்னை

அரசுப்பேருந்தில் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும்படி செயல்பட்ட கல்லூரி மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் சிலர் தாங்கள் கையில் வைத்திருந்த கத்திகளை வைத்து சாலையில் தேய்த்தபடி செல்வதும் பொதுமக்களை அச்சுறுத்துவது போல கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தியது.

  இதுகுறித்து எம்கேபி நகர்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த மாதம் 28-ம் தேதி ரெட்டில்ஸ் பகுதியில் இருந்து  வள்ளலார் நகர் வரை செல்லும் அரசு பேருந்து தடம் எண் 57 என்ற பேருந்தில் சென்ற மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. வியாசர்பாடி எருக்கஞ்சேரி ஹை ரோடு பகுதியாக செல்லும்போது வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிய படி  ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அதில் இரு மாணவர்கள் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும்படி செயல்பட்டது தெரிய வந்தது.

  இதனையடுத்து வீடியோவில் வந்த மாணவர்களின் பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் கத்தியில் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த எம்.கே.பி நகர் போலீசார் மாணவர்கள்  மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  செய்தியாளர்: அசோக் குமார்

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Bus, Chennai, Crime News