முகப்பு /செய்தி /சென்னை / பிரபல கொள்ளையன் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. சென்னையில் பயங்கரம்!

பிரபல கொள்ளையன் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. சென்னையில் பயங்கரம்!

கொல்லப்பட்ட முருகன்

கொல்லப்பட்ட முருகன்

Chennai murder | சென்னையில் பிரபல கொள்ளையன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை அருகே பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளி கண்மூடி முருகன் அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

சென்னை நீலாங்கரை, சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (22) என்கிற கண்மூடி முருகன் என்பவர் மேட்டுகுப்பம் வெங்கடேஸ்வரா அவின்யூவில் உள்ள ஒரு கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார்.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், முருகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் கொலை செய்தது யார் என விசாரணை மேற்கொண்டனர்.

அதில், முருகன் என்கின்ற கண்மூடி முருகன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், நீலாங்கரை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இறந்து கிடந்த இடத்தில் கண்மூடி முருகன் நான்கு பேருடன் மது அருந்து வந்ததாகவும், மதுபோதையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கண்மூடி முருகனை குத்தி கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, போலீசார் தனிப்படை அமைத்து அப்பகுதியில் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய அடையாளம் தெரியாத நபர்களை துரைப்பாக்கம் தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

செய்தியாளர்: ப.வினோத் கண்ணன், இசிஆர்.

First published:

Tags: Chennai, Crime News, Murder