ஹோம் /நியூஸ் /சென்னை /

சிகிச்சைக்கு சென்ற சிறுமி திடீர் மரணம்... கதறும் பெற்றோர்... மருத்துவமனையை குறைக்கூறும் உறவினர்கள்..

சிகிச்சைக்கு சென்ற சிறுமி திடீர் மரணம்... கதறும் பெற்றோர்... மருத்துவமனையை குறைக்கூறும் உறவினர்கள்..

சிகிச்சைக்கு சென்ற சிறுமி திடீர் மரணம்... கதறும் பெற்றோர்... மருத்துவமனையை குறைக்கூறும் உறவினர்கள்..

Chennai | திருமணமாகி 6 வருடங்கள் கழித்து பிறந்த ஒரே மகளை இழந்து விட்டதாகக் கூறி பெற்றோர் கதறி அழுதது காண்போரைக் கலங்கச் செய்தது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  சென்னை தண்டையார் பேட்டையில் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற வந்த சிறுமி உயிரிழந்த சம்பவத்தில், தவறான ஊசி செலுத்தப்பட்டதால் தங்களது மகள் உயிரிழந்து விட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

  சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் ரமேஷ், வசந்தி தம்பதி.இவர்களது ஒரே மகள் 15 வயது நந்தினி, பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் வயிற்றுவலி காரணமாக மண்ணடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார்.

  சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு அல்சர் பிரச்சினை இருப்பதாகக் கூறி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். செவ்வாய் கிழமை காலை சிறுமிக்கு புதிதாக ஊசி ஒன்றை மருத்துவர்கள் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதாக சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

  Read More : ஆபாச படங்களுக்கு அடிமையான சிறுவன்.. கரும்பு காட்டில் சிறுமிக்கு நடந்த கொடூரம்!

  உடனடியாக சிறுமியை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றிய மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து சிகிச்சை அளித்தும் உடல்நிலை மோசமடைந்து வந்த நிலையில், புதன் கிழமை காலை 8 மணியளவில் சிறுமி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

  கதறி அழுத பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமிக்கு தவறான ஊசியை செலுத்தியதாலேயே அவர் உயிரிழந்து விட்டார் எனக் கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு கடற்கரை போலீசார், உறவினர்கள் மற்றும் பெற்றோரிடம் பேசி சிறுமியின் உடலை ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்

  திருமணமாகி 6 வருடங்கள் கழித்து பிறந்த ஒரே மகளை இழந்து விட்டதாகக் கூறி பெற்றோர் கதறி அழுதது காண்போரைக் கலங்கச் செய்தது. முதல்கட்ட உடற்கூறாய்வு அறிக்கைக்கு பிறகே சிறுமியின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்தனர்.

  இதனிடையே மருத்துவமனை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் சிறுமிக்கு வழக்கமான ஊசியை மட்டுமே செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்சர் பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Chennai