தாம்பரம் அருகே 25 நாட்களுக்கு முன்பு காணாமல் போன பெண் மதபோதகர் வனப்பகுதியில் எலும்பு கூடாக மீட்கப்பட்டார். கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் மதுரபாக்கம் கிராமத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஆடு மேய்க்க சென்ற ஒருவர். அழுகிய நிலையில் எலும்பு கூடு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் அங்கு சென்று எலும்பு கூடை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து சமீபத்தில் காணாமல் போனவர்களைப் பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அகரம் தென் எம்ஜிஆர் நகர், மகாலட்சுமி தெருவை சேர்ந்த ஏஞ்சலின் என்பவர் மதபோதகரான தனது தாய் எஸ்தர் (வயது 55). என்பவரை கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் காணவில்லை என கடந்த 8ஆம் தேதி சேலையூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவர் எப்பொழுதும் பெருங்களத்தூரில் உள்ள சபைக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 26ம் தேதி சபைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை என புகார் அளித்தார். தற்பொழுது அடர்ந்த வனப்பகுதியில் எலும்புக்கூடாக மீட்டெடுத்தது எஸ்தர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் எஸ்தர் உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது. பின்னர் அவரது உடலை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி காணாமல் போன எஸ்தர் எப்படி அடர்ந்த வனப்பகுதிக்கு வந்தார். அவரை யாரேனும் கடத்திச் சென்று கொலை செய்து வனப்பகுதியில் உடலை வீசிவிட்டு சென்றனரா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.