Home /News /chennai /

பணம் நகைகளை கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கை - கொள்ளையன் அதிர்ச்சி வாக்குமூலம்

பணம் நகைகளை கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கை - கொள்ளையன் அதிர்ச்சி வாக்குமூலம்

கொள்ளையன் கைது

கொள்ளையன் கைது

பல இடங்களில் பலரிடம் நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு போலீசில் சிக்கும் வரை உல்லாச வாழ்க்கை அனுபவிப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tambaram | Tamil Nadu
    தாம்பரத்தில் தொடர்ந்து 120 சவரன் வரை தங்க நகையை கொள்ளையடித்து சென்ற கொள்ளையனை, பாஸ்ட் டேக்கில் இருந்து வந்த குறுந்தகவல் மூலம் போலீசார் மடக்கி பிடித்தனர்.

    சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பெரியார் நகர் 10வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயசீலன்(38). இவரது மனைவி நாகமணி(31). இவர்கள் தாம்பரத்தில் வருமானவரி கன்சல்டன்சி நிறுவனம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி ஜெயலீசலன் சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறை ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் சிவகங்கையில் உள்ள அவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என தகவல் வந்ததும், உடனே கடந்த 9-ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்தினருடன் சிவகங்கைக்கு புறப்பட்டு சென்றனர். பின்னர் ஜெயசீலன் குடும்பத்துடன் கடந்த 12-ம் தேதி வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோதுபீரோ உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 92 சவரன் தங்க நகைகள், ரூ.30,000 ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கைரேகை நிபுணர்களை அழைத்து கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 3ன் தனிப்படைகள் அமைத்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாராணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி அன்று அதிகாலை காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து சென்னையில் திருடப்பட்ட TN-76 AA-5457 ஷிப்ட் கார் ஒன்று மதுரவாயில் சுங்க சாவடியை கடந்து தாம்பரம் நோக்கி செல்வதாக தாம்பரம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    ALSO READ | பள்ளிக்கு செல்ல கண்டித்த தாய்… 3-வது மாடியிலிருந்து குதித்து பள்ளி மாணவர் தற்கொலை

    உடனே தாம்பரம் போலீசார் பெருங்களத்தூர் அருகே பேரிகாடுகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டி வந்த ஷிப்ட் காரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில், காரை திருடி வந்ததாக அவர் ஒப்பு கொண்டுள்ளார். தொடர்ந்து காரை பறிமுதல் செய்த போலீசார், அந்த நபரை கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த சூர்யா என்றும், ஜெயசீலன் வீட்டில் நகையை கொள்ளையடித்ததும் அவர் தான் என கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும், பல இடங்களில் பலரிடம் நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு போலீசில் சிக்கும் வரை உல்லாச வாழ்க்கை அனுபவிப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி சிறையில் இருந்து வெளிவந்த அவர், பல்வேறு வீடுகளில் கைவரிசை காட்டியுள்ளார்.

    செய்தியாளர்: சுரேஷ்.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Crime News, Tambaram, Theft

    அடுத்த செய்தி