ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு - 2 சுரங்கப்பாதை மூடல்.. போக்குவரத்து மாற்றம்

சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு - 2 சுரங்கப்பாதை மூடல்.. போக்குவரத்து மாற்றம்

சென்னையில் சுரங்கப்பாதை மூடல்

சென்னையில் சுரங்கப்பாதை மூடல்

சென்னையில் மழைநீர் தேங்கியதால் கணேசபுரம், ரங்கராஜபுரம் சுரங்கப்பாதைகள் காவல்துறையினர் மூடியுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. அதனால் இரண்டு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டதாகவும் ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

  இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சென்னையில் மழை நீர் அதிகம் தேங்கியுள்ள கணேசபுரம் மற்றும் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை இரண்டும் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் போக்குவரத்துக்காக மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also see... இன்னும் 3 மணி நேரம் இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை நீடிக்குமாம்!

  ரங்கராஜபுரம் சுரங்க பாதை வழியாக செல்லும் வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் ரங்கராஜபுரம் மேம்பாலம் வழியே செல்ல அறிவுறுத்தப்படுகிறது. அதேபோல்  கணேசபுரம் சுரங்கபாதை வழியாக உள்ளிருந்து வெளியில் செல்லக்கூடிய வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை, காந்தி நகர் ரவுண்டானா மற்றும் பேசின் பாலம் வழியாகவும் வெளியில் இருந்து உள்ளே வரக்கூடிய வாகனங்கள் பெரம்பூர் நெடுஞ்சாலை முரசொலி மாறன் பாலம் வழியாகவும் செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செஊயப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Chennai