Home /News /chennai /

ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. பள்ளி பியூன் போக்சோவில் கைது

ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. பள்ளி பியூன் போக்சோவில் கைது

போக்சோ கைது

போக்சோ கைது

சிறுமி பள்ளிக்கு செல்ல பயந்து அழுதுள்ளார். சிறுமியிடம் பெற்றோர் நைசாக பேசி விசாரித்ததில் பள்ளியின் பியூன் ராஜ்(38) என்பவா் கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. 

    சென்னையில் ஒன்றாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதே பள்ளியின் கடைநிலை ஊழியரை (பியூன்) போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

    சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்தவரின் ஐந்து வயது மகள்  தனியார் பள்ளியில்   ஒன்றாம்  வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 29ம் தேதியிலிருந்து அந்த சிறுமிக்கு உடல்நிலை சரி இல்லாததால் பள்ளிக்கு செல்லவில்லை. தற்போது உடல்நிலை சீரடைந்த நிலையில் நேற்று காலை சிறுமியை பெற்றோர் பள்ளிக்கு அனுப்ப தயாா்படுத்தியுள்ளனா்.

    ஆனால் அந்த சிறுமி பள்ளிக்கு செல்ல பயந்து அழுதுள்ளார். அதோடு அந்த பள்ளிக்கு நான் போகமாட்டேன் வேறு பள்ளிக்கு அனுப்புங்கள் என்று சிறுமி அடம்பிடித்துள்ளார். இதையடுத்து சிறுமியிடம் பெற்றோர் நைசாக பேசி விசாரித்தனா். அப்போது சிறுமி படித்த அந்த பள்ளியின் பியூன் ராஜ்(38) என்பவா் கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து  சிறுமியின் பெற்றோா் பள்ளிக்கு சென்று நிர்வாகத்திடம் புகாா் செய்துள்ளனர் ஆனால் பள்ளி நிர்வாகம் சரிவர பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. அதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் சம்மந்தப்பட்ட பள்ளிக்கு சென்று பியூன் ராஜிடம் விசாரணை நடத்தியதில் சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகார் உண்மை என தெரியவந்துள்ளது.

    இதையும் படிங்க: சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து, லீசுக்கு விட்டு ₹20 கோடி அபேஸ்.. ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது 154 பேர் புகார்

    பின்னர்  ராஜியை கைது செய்த பெரும்பாக்கம் போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    செய்தியாளர்- வினோத் கண்ணன்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Pocso, Sexual harassment

    அடுத்த செய்தி