ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் மாமூல் கேட்டு சலூன் கடை ஊழியர்களை தாக்கிய இளைஞர் - மேயர் பெயரை சொல்லி மிரட்டல்

சென்னையில் மாமூல் கேட்டு சலூன் கடை ஊழியர்களை தாக்கிய இளைஞர் - மேயர் பெயரை சொல்லி மிரட்டல்

சலூன் கடை புகுந்து மாமூல் கேட்டு தாக்கும் பாஸ்கரன்

சலூன் கடை புகுந்து மாமூல் கேட்டு தாக்கும் பாஸ்கரன்

வட மாநிலத்தில் இருந்து பணிபுரியும் நபர்களை இந்த பாஸ்கர் பிரசாந்த் என்ற நபர் அவர்களை தாக்கி அவர்களிடம் இருந்த பணத்தை பறித்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சத்யபாலன் இவர் அதே பகுதியில் தனது தந்தை காலத்தில் இருந்து 83 வருடங்களாக சலூன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி இரவு பாக்சர் பிரசாந்த் என்ற நபர் தன்னுடைய கடையில்  பணிபுரியும்  ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அது மட்டுமில்லாமல் கண்ணத்தில் அறைந்திருக்கிறார். அதற்கு அடுத்தப்படியாக  பக்கத்தில் இருக்கக்கூடிய டீக்கடையிலும் பணம் கேட்டு குடிபோதையில் தொந்தரவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக சலூன் கடை உரிமையாளர் சத்யபாலன்  புளியந்தோப்பு காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் குடிபோதையில் இருந்த நபரை போலீசார்  விசாரித்து அனுப்பி வைத்துள்ளனர். குறிப்பாக கடையில் கத்தியை வைத்துக்கொண்டு பணிபுரியும் நேரத்தில் பிரச்சினை செய்துள்ளார். இந்த சமயத்தில் கத்தியால் தவறுதலாக பணியை செய்து விட்டால் கஸ்டமர் மட்டும் பாதிக்கப்படாமல் நாங்களும் ஜெயிலுக்கு போக வேண்டிய சூழ்நிலை உருவாகும், என சலூன் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:  சென்னை நீலாங்கரையில் 12ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு விபரீத முடிவு..!

இதனிடையே புளியந்தோப்பு ஆய்வாளர்  அந்த நபரை கைது செய்வதாக உறுதி அளித்திருக்கிறார். இது போன்ற சிறு சிறு கடை வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு தொந்தரவு செய்யும் ரவுடிகளை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக வட மாநிலத்தில் இருந்து பணிபுரியும் நபர்களை இந்த பாஸ்கர் பிரசாந்த் என்ற நபர் அவர்களை தாக்கி அவர்களிடம் இருந்த பணத்தை பரித்துள்ளதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல் காவல் நிலையத்தில் தான் சென்னை மாநகராட்சி மேயரின் அண்ணன் எனவும், ஆகவே உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என குடிபோதையில் தவறுதலாக அதிகாரிகளை பெயர்களை பயன்படுத்தியுள்ளார். இது தொடர்பாகவும் போலீசார் அந்த நபரை விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

செய்தியாளர் : அசோக்குமார்

First published:

Tags: Crime News, Mayor Priya