ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் போலீஸார் தாக்கியதில் ரவுடி மரணமா..? - உறவினர்கள் குற்றச்சாட்டு

சென்னையில் போலீஸார் தாக்கியதில் ரவுடி மரணமா..? - உறவினர்கள் குற்றச்சாட்டு

ரவுடி மரணம்

ரவுடி மரணம்

விசாரணையில் போலீசார் ஆகாஷை விடிய விடிய அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மயக்கம் அடைந்த ஆகாஷை அவரது உறவினர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அவரது அனுமதித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai | Chennai [Madras] | Tamil Nadu

  சென்னையில் காவல் நிலையம் அழைத்துச் சென்று ரவுடியை அடித்ததாக எழுந்த புகாரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரவுடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  சென்னை, ஓட்டேரியை சேர்ந்தவர் ஆகாஷ். இவர் மீது ஓட்டேரி, வியாசர்பாடி, உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஓட்டேரி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகளை உடைத்த குற்றத்திற்காக கடந்த 21 ஆம் தேதி இரவு ஆகாஷை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்றதாக தெரிகிறது.

  தொடர்ந்து ஆகாஷ் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணையில் போலீசார் ஆகாஷை விடிய விடிய அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மயக்கம் அடைந்த ஆகாஷை அவரது உறவினர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர்.

  இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது ரவுடி ஆகாஷ் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Crime News, Lockup death