ஹோம் /நியூஸ் /சென்னை /

”எனது மகனை 5 போலீசார் அடித்து கொன்றுள்ளனர்” - ரவுடி ஆகாஷின் தாய் கதறல்.. நடந்தது என்ன?

”எனது மகனை 5 போலீசார் அடித்து கொன்றுள்ளனர்” - ரவுடி ஆகாஷின் தாய் கதறல்.. நடந்தது என்ன?

ரவுடி மரணம்

ரவுடி மரணம்

Chennai | சென்னையில் காவல் நிலையம் அழைத்துச் சென்று ரவுடியை அடித்ததாக எழுந்த புகாரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரவுடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai [Madras]

சென்னை, ஓட்டேரியை சேர்ந்தவர் ஆகாஷ். இவர் மீது ஓட்டேரி, வியாசர்பாடி, உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் கடந்த 21 ஆம் தேதி இரவு 9 மணி அளவில் அயனாவரம் பகுதியில் உள்ள ரயில்வே ஊழியரின் வீட்டில் நிறுத்தி இருந்த கார் கண்ணாடியை கஞ்சா மற்றும் மது போதையில் உடைத்து பிரச்னை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரயில்வே ஊழியர் அளித்த புகாரின் பேரில் ஓட்டேரி போலீசார் ஆகாஷை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின் விசாரணை முடிந்து இரவு 11 மணியளவில் ஆகாஷின் அக்கா காயத்ரியிடம் ஆகாஷை ஒப்படைத்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், விசாரணையின் போது காவல் நிலையத்தில் வைத்து அடித்ததால் தனது தம்பி மயங்கி விட்டதாக போலீசார் தகவல் தெரிவித்ததாகவும், பிறகு மயக்கமடைந்த நிலையில் கிடந்த ஆகாஷை மீட்டு தாங்கள்  மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் ஆகாஷின் அக்கா காயத்ரி தெரிவித்துள்ளார்.

மயக்கமடைந்த ஆகாஷை கடந்த 22-ம் தேதி காலை கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.  போலீசார் அடித்ததால் மட்டுமே ஆகாஷ் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தார்கள் தெரிவித்து கே.எம்.சி மருத்துவமனையை முற்றுகையிட்டு உள்ளனர்.

ALSO READ | தமிழகத்தில் புதுப்பொலிவு பெற போகும் 5 ரயில் நிலையங்கள்.. ரயில் பயணிகள் உற்சாகம்..!

இது தொடர்பாக ரவுடி ஆகாஷின் தாய் லட்சுமி பேசுகையில், தனது மகனை 5 போலீசார் அடித்து கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளார். விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனது மகனை போலீசார் அடித்ததில் அவர் அங்கேயே மயக்கம் போட்டு விழுந்ததாகவும் பின்னர் தாங்களே மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் தெரிவித்தார். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினத்திலிருந்து நேற்று மாலை வரை டிரிப்ஸ் மட்டுமே போட்டு வந்ததாகவும் தனது மகன் சுயநினைவு இல்லாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தனது மகனை அடித்துக் கொன்ற 5 போலீசாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by:Anupriyam K
First published:

Tags: Chennai, Crime News, Lockup death