ஹோம் /நியூஸ் /சென்னை /

லிப்ட் கொடுத்தது குத்தமா! வழிப்பறி செய்து பணம் கொள்ளை.. சென்னையில் பயங்கரம்!

லிப்ட் கொடுத்தது குத்தமா! வழிப்பறி செய்து பணம் கொள்ளை.. சென்னையில் பயங்கரம்!

கொள்ளையர்கள் கைது

கொள்ளையர்கள் கைது

Chennai News : சென்னையில் லிப்ட் கேட்டு வண்டியில் ஏறிய 2 பேர் ஆளில்லாத இடத்தில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai

சென்னையில் லிப்ட் கொடுத்த நபரை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன், பணம் பறித்த வழக்கில் போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

சென்னை ஓட்டேரி ஹைதர் கார்டன் இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (21) . இவர் லயோலா கல்லூரியில் பி காம் வணிகவியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். ஓட்டேரி குக்ஸ் ரோட்டில் உள்ள தேவாலயத்திற்கு சென்று விட்டு மீண்டும் நேற்று முன்தினம் இரவு ஒரு மணி அளவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது இரண்டு நபர்கள் லிப்ட் கேட்டுள்ளனர். அவர்களுக்கு கருணை காட்டிய ஆகாஷ், இருவரையும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது, ஹைதர் கார்டன் அம்பேத்கர் மன்றம் அருகே வாகனத்தை நிறுத்த சொல்லி தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து ஆகாஷின் தலையில் அடித்து 30,000 ரூபாய் மதிப்புள்ள செல்போன், ஸ்மார்ட் வாட்ச், 2000 ரூபாய் உள்ளிட்டவற்றை பிடுங்கி சென்றனர்.

இதுகுறித்து ஆகாஷ் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஓட்டேரி  போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் குமார் 22 மற்றும் அதே பகுதியில் சேர்ந்த தருண் 19 ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த ஆகாஷின் ஸ்மார்ட் வாட்ச் செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

செய்தியாளர்: அசோக்குமார், சென்னை.

First published:

Tags: Arrest, Chennai, Local News, Theft