Home /News /chennai /

சென்னையில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்குது மழை..!

சென்னையில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்குது மழை..!

சென்னையில் மழை

சென்னையில் மழை

Chennai Rains : சென்னையில் பல நாட்களாக வெயில் வாட்டிவந்த நிலையில் இன்று மாலையிலிருந்து இடி, மின்னலுடன் கன மழை பெய்து வருவதால் உஷ்ணம் தனிந்து குளிர்ச்சி பரவியுள்ளதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென மழை வெளுத்து வாங்கி வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் 2 மணி நேரமாக மழை பெய்து வருகிறது.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் மாலை முதல் சென்னையில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

    தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி போன்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், தலைநகர் சென்னையில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. குறிப்பாக கடந்த சில தினங்களில் கத்திரி வெயிலை நினைவூட்டும் வகையில் வெயில் உக்கிரமாக இருந்தது.. பகலில் மட்டுமல்லாது மாலை நேரங்களில் உஷ்னம் அதிக அளவில் இருந்ததால், புழுக்கம் அதிகரித்து இரவு நேரங்களில் தூங்குவதற்கே சிரமப்பட்டு வந்தனர் சென்னைவாசிகள்.

    சென்னையில் இடி மின்னலுடன் மழை


    இப்படியான சூழலில் இன்று மதியம் வரையில் வெயில் வழக்கமான உக்கிரத்துடனே உஷ்ணத்தை கக்கியது. இருப்பினும் மாலை நேரத்தில் வானிலையில் மாற்றம் தென்பட்டது. மேகங்கள் சூழ நகரின் ஒரு சில பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் காற்று, தூரல் என இருந்தது..

    இதையும் படிங்க:  தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்.

    மாலை 7 மணிக்கு மேல் கரு மேகங்கள் சூழ்ந்து நகரின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யத் தொடங்கியது. கோயம்பேடு, அண்ணாநகர், சைதாப்பேட்டை, தி.நகர், கே.கே.நகர். அண்ணா சாலை, திருமங்கலம், திருவொற்றியூர், காசிமேடு, ராயபுரம், பெரம்பூர், ஓட்டேரி, புரசைவாக்கம் என பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

    சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, போரூர், ஐயப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், திருவேற்காடு, வேலப்பன்சாவடி, குமணன்சாவடி, மாங்காடு, மௌலிவாக்கம், முகலிவாக்கம், கோவூர் ,குன்றத்தூர், கரையான்சாவடி, நசரத்பேட்டை, திருமழிசை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

    அதே போல் சென்னையைய் ஒட்டியுள்ள பல்லாவரம்,  மீனம்பாக்கம், தாம்பரம், நெற்குன்றம், கோயம்பேடு, மதுரவாயல், ஆலப்பாக்கம், ஆழ்வார் திருநககர்,வானகரம் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி காட்சியளிக்கிறது..

    இதேபோல சென்னை தாம்பரம் மதுரவாயல் புறவழிச்சாலையில் இடி மின்னலுடன் கொட்டும் கண மழையால் வாகனங்கள் திணறலாக ஆமை வேகத்தில் சென்று வருகின்றன..

    இதையும் படிங்க:  ”சான்ஸே இல்ல இல்ல சான்ஸே இல்ல நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல” - 383 ஆவது சென்னை தினம்

    சென்னை தினம் (Madras Day) கொண்டாடப்படும் நிலையில் இன்று இந்த மழை, வருண பகவான் அளித்த ஆசியாகவே சென்னை மக்கள் கருதுகின்றனர்.
    Published by:Arun
    First published:

    Tags: Chennai, Chennai rains, Weather News in Tamil

    அடுத்த செய்தி