Home /News /chennai /

ஒன்பது மாதங்கள் கழித்து குடும்பத்துடன் இணைந்த 75 வயது மூதாட்டி... கண்டுபிடித்து கொடுத்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

ஒன்பது மாதங்கள் கழித்து குடும்பத்துடன் இணைந்த 75 வயது மூதாட்டி... கண்டுபிடித்து கொடுத்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

ஒன்பது மாதங்கள் கழித்து குடும்பத்துடன் இணைந்த 75 வயது மூதாட்டி... 

ஒன்பது மாதங்கள் கழித்து குடும்பத்துடன் இணைந்த 75 வயது மூதாட்டி... 

ஆந்திராவில் தொலைந்து தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மூதாட்டியை அவர்களது உறவினர்களிடம் மருத்துவர்கள் ஒப்படைத்தனர் |

கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன், ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் தனது வீட்டிலிருந்து கோயிலுக்கு செல்வதாக கூறி வெளியேறிய வரலட்சுமி என்ற 75 வயது மூதாட்டி மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர் ரயிலில் தவறி விழுந்து தலையில் அடிபட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரண்டு மாதங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். ஆதரவற்றோருக்கான வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர்  தொடர் சிகிச்சப் பெற்று வந்தார். தெலுங்கு மொழி மட்டுமே தெரிந்த அவரிடம் மருத்துவ மாணவி பிரியதர்ஷினி தெலுங்கில் பேசி அவரது விவரங்களை கேட்டுள்ளார்.

அவரால் தனது முகவரி, தொடர்பு எண் என எதையும் நினைவு படுத்தி கூற முடியாததால் மாணவி ஆந்திராவில் உள்ள தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து மூதாட்டியின் போட்டோவை ஊரெங்கும் போஸ்டர் அடித்து உள்ளனர். அதன் மூலம் மூதாட்டியின் குடும்பத்தினருக்கு நேற்று காலை தகவல் தெரிந்து இன்று அவரை அழைத்து செல்ல அவரது மருமகளும் பேரனும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆதரவற்றோருக்கான பிரத்யேக வார்டு 2020ம் ஆண்டு முதல்  செயல்பட்டு வருகிறது. இதில் இதுவரை 53 பேர் தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர்.

Also see...தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டாம் -

இங்குள்ள நோயாளிகளுக்கு முகம் சுழிக்காமல் அடிப்படை பணிவிடை செய்து செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பராமரித்து வருகின்றனர். பல தன்னார்வலர்கள் டிவி உட்பட அந்த வார்டுக்கு தேவையான வசதிகளை செய்து வருகின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Rajiv gandhi Hospital

அடுத்த செய்தி