ஹோம் /நியூஸ் /சென்னை /

ஆர்ப்பரித்து கொட்டுதே.. சென்னையில் திடீர் அருவி.. அதிகாரிகளின் யோசனையால் மக்கள் மகிழ்ச்சி!

ஆர்ப்பரித்து கொட்டுதே.. சென்னையில் திடீர் அருவி.. அதிகாரிகளின் யோசனையால் மக்கள் மகிழ்ச்சி!

சென்னை அருவி

சென்னை அருவி

Chennai | மெட்ரோ ரயில் பணிக்காக கல்குவாரிகளில் இருந்து கற்கள் எடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் குவாரியில் தண்ணீர் தேக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை புறநகர் பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை ஆக்கபூர்வமாக சேமித்து வைக்கும் வகையில் கல்குவாரிகளில் தண்ணீர் தேக்கும் திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, மலையம்பாக்கம், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி மக்களை பாதிப்படைய வைத்துள்ளது.

இதற்கு தீர்வு காண மாங்காடு அருகே உள்ள கல்குவாரியில் தண்ணீரை சேமித்து வைத்தால் என்ன? என்று சமயோசிதமாக யோசித்த நகராட்சி துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை துறை அதிகாரிகள், வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ராட்சத கால்வாய்களை அமைத்தனர்.

கால்வாயில் பணிகள் முடிந்த நிலையில், தேங்கி நின்ற தண்ணீர் கால்வாய்களில் விடப்பட்டு, கல்குவாரிக்கு சென்றடைந்துள்ளது. இதனால் மாங்காடு, கொளப்பாக்கம் ஊராட்சியில் வெள்ளம் தேங்குவது நின்றதுடன் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையையும் சமாளிக்க அடடே யோசனையாக இது மாறியுள்ளது.

மெட்ரோ ரயில் பணிக்காக கல்குவாரிகளில் இருந்து கற்கள் எடுக்கப்பட்ட நிலையில், அந்த குவாரியை மீண்டும் தண்ணீர் தேக்கும் பலே யோசனை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

First published:

Tags: Chennai, Heavy rain, Rain water