தனியார் நிறுவனத்தில் ரூ.23 லட்சம் கொள்ளையடித்து தப்பி சென்ற அசாம் மாநிலத்தை சேர்ந்த காவலாளியை விமானம் மூலம் பறந்து சென்று காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை துரைப்பாக்கம் பகுதியில் ஹீரா எண்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி 22ம் தேதி அதிகாலை நிறுவனத்தின் லாக்கரில் இருந்த ரூ.23 லட்சம் கொள்ளை போனது. கொள்ளைபோன தினத்தில் காவலாளி பிரப்பின் மாயமானார். இந்த நிலையில் இது குறித்து அந்த தனியார் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த துரைப்பாக்கம் ஆய்வாளர் வளர்மதியும் அவரது தலைமையில் உதவி ஆய்வாளர் ரமேஷ், தலைமை காவலர் புஷ்பராஜ், முதல்நிலை காவலர் கருப்பு ராஜா ஆகியோர் கொண்ட தனிப்படை அசாம் மாநிலம் தப்பிச் சென்ற காவலாளியை பிடிக்க விமானத்தில் பறந்து சென்றனர்.
விசாரணையில் தாம்பரம் அடுத்த சந்தோஷபுரத்தில் உள்ள டாபர்மேன் செக்யூரிட்டி என்ற நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தை சேர்ந்த 40 வயதான பிரப்பின் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். மேலும் அவர் காவலுக்கு இருக்கும்போதேல்லாம் பணம் உள்ளது பார்த்துகொள் என தினமும் அந்த தனியார் நிறுவனம் காவலாளி பிரப்பினிடம் கூறி நிறுவனத்தின் சாவியை கொடுத்து வந்துள்ளது. இதனால் பணத்தை கொள்ளை அடிக்க திட்டமிட்ட பிரப்பின் கடந்த 22ம் தேதி அதிகாலை நிறுவனத்தின் லாக்கரில் இருந்த ரூ.23 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சொந்த ஊரான அசாம் மாநிலம் நாகர்கெட்டியா கிராமத்திற்கு சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து பணத்துடன் தப்பியோடிய பிரப்பினை பிடிக்க துரைப்பாக்கம் ஆய்வாளர் வளர்மதி தலைமையில் உதவி ஆய்வாளர் ரமேஷ் தனிப்படை அமைத்து அசாம் மாநிலம் தப்பிச் சென்ற காவலாளியை பிடிக்க விமானத்தில் பறந்து சென்றனர். கட்டு கட்டாக பணத்துடன் சொந்த ஊருக்கு தப்பி சென்ற பிரப்பினை அவரது செல்ஃபோன் எண்ணை வைத்து அசாம் சிமலுகுரி ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
இந்த நிலையில் பிரப்பின் சொந்த கிராமத்தில் கொள்ளை அடித்தவர்களை பிடிக்க சென்றால் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வருவதை போல போலீசாரை விரட்டி அடிக்கும் மோசமான கிராமம் என்றும் அதனையும் மீறி தமிழ்நாடு காவல்துறையினர் கொள்ளையன் பிரப்பினை பிடித்து அங்குள்ள காவல் நிலையத்தில் பதிவு செய்துவிட்டு அசாம் மாநில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர்.
சென்னை அழைத்து வந்த அவரிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையடித்த அன்று காலை வழக்கம்போல் பணி முடிவதற்கு முன்பு அதிகாலை 5 மணியளவில் பணம் உள்ள பகுதியில் மின் இணைப்பை துண்டித்து விட்டு செல்ஃபோன் டார்ச் அடித்தபடி லாக்கரில் உள்ள ரூபாய் 23 லட்சத்தை கொள்ளையடித்துள்ளது தெரியவந்தது.
பின்னர் கொள்ளையடித்த பணத்தை ஓர் பையில் எடுத்துக்கொண்டு கோயம்பேடு சென்றுள்ளார். பின்னர் கோயம்பேட்டில் இருந்து பேருந்து மூலம் பெங்களூர் சென்றுள்ளார். கொள்ளையடித்த மறுநாள் அன்று பெங்களூரில் இருந்து கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குண்டுபுரா பகுதிக்கு சென்று அங்கு ஒரு புதிய சிம் கார்டு மற்றும் செல்ஃபோன் வாங்கியுள்ளார். இரண்டு நாள் அங்கு தங்கி மது மற்றும் பெண்கள் என உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வாழ்ந்ததும் பின்னர் 25ம் தேதி குண்டுபுராவில் இருந்து மீண்டும் பெங்களூர் சென்றுள்ளார்.
பின்னர் பெங்களூரில் இருந்து 26ம் தேதி கேரளா எர்ணாகுளத்திற்கு ரயிலில் சென்று அங்கிருந்து சொந்த ஊரான அசாம் மாநிலம் நாகர்கெட்டிய கிராமத்திற்கு ரயிலில் சென்றுள்ளார். கொள்ளையடித்த பணத்துடன் வடமாநில காவலாளி அவரது சொந்த ஊரில் இறங்குவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பே துரைப்பாக்கம் குற்றப்பிரிவு தனிப்படையினர் அங்கு காத்திருந்தபோது ரயிலில் இருந்து பிரப்பின் இறங்கியதும் கண் இமைக்கும் நேரத்தில் கைது செய்து கையில் கட்டு காட்டாக வைத்திருந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் கொள்ளையடித்து வடமாநிலத்திற்கு தப்பி சென்றால் நம்மை யாராலும் பிடிக்க முடியாது என்று நினைத்த கொலயடித்தவரை அசால்டாக கைது செய்து கொள்ளையடித்த பணத்தையும் பறிமுதல் செய்த துரைப்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் வளர்மதி, உதவி ஆய்வாளர் ரமேஷ், தலைமை காவலர் புஷ்பராஜ், முதல்நிலை காவலர் கருப்பு ராஜா ஆகியோர் கொண்ட தனிப்படையினரை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெகுவாக பாராட்டினார்.
பயிரை பாதுகாக்க வேலி அமைத்தால் வேலியே பயிரை மேய்ந்த கதையாய் பணத்தை பாதுகாக்கும் காவலாளியே பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: வினோத் கண்ணன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Assam, Chennai, Crime News, Tamilnadu police