ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையின் முக்கிய பகுதிகளில் திங்கள் கிழமை மின்தடை அறிவிப்பு... உங்க பகுதி இருக்கானு செக் பண்ணிக்கோங்க..

சென்னையின் முக்கிய பகுதிகளில் திங்கள் கிழமை மின்தடை அறிவிப்பு... உங்க பகுதி இருக்கானு செக் பண்ணிக்கோங்க..

மாதிரி படம்

மாதிரி படம்

சென்னையில் 07.11.2022 மற்றும் 08.11.2022 நாட்களில் மின் தடை இருக்கும் பகுதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னையில் வரும் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்கிழமையில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.

  சென்னையில் 07.11.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கிண்டி ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

  கிண்டி பகுதி : மடிபாக்கம் மூவரசம்பேட்டை சபரி சாலை, ஐயப்பா நகர் 1வது முதல் 11வது தெரு வரை, மேடவாக்கம் மெயின் ரோடு, கணேஷ் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின் தடை இருக்கும்.

  இதையும் படிங்க: மழைக்கு நேற்று ஒரேநாளில் 3 நபர்கள், 25 கால்நடைகள் பலி.. வடகிழக்கு பருவமழை அப்டேட்..

  08.11.2022 செவ்வாய்க்கிழமை மின்தடை இருக்கும் பகுதிகள்

  சென்னையில் 08.11.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அம்பத்தூர், பெரம்பூர், கிண்டி, கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

  அம்பத்தூர் பகுதி : முகப்பேர் கலெக்ட்டர் நகர், அமிர்தா பிளாட்ஸ், ஜெம் ஸ்டோன் அப்பார்ட்மென்ட், மெடிமிக்ஸ் அவென்யூ மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

  பெரம்பூர் பகுதி : சிட்கோ அகத்தியர் நகர், குமாரசாமி நகர், பொன்விழா நகர், அஞ்சலி அப்பார்ட்மென்ட், சத்யா நகர், எம்.டி.எச்.ரோடு, சிவசக்தி காலனி

  கிண்டி பகுதி : வாணுவம்பேட்டை ஆண்டாள் நகர் 1வது மெயின் ரோடு, மகாலட்சுமி 4வது மெயின் ரோடு, ஏ.ஜி.எஸ்.காலனி 1 முதல் 2வது மெயின் ரோடு வரை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

  கே.கே.நகர் பகுதி : ஆழ்வார்திருநகர் வளசரவாக்கம் சௌத்ரிநகர் 8வது தெரு முதல் 19வது தெரு வரை மற்றும் பெத்தானியநகர் 1வது முதல் 3வது தெரு வரை.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Chennai, TNEB