முகப்பு /செய்தி /சென்னை / சென்னையில் நாளை இங்கெல்லாம் மின்தடை... முன்னெச்சரிக்கையா இருங்க!

சென்னையில் நாளை இங்கெல்லாம் மின்தடை... முன்னெச்சரிக்கையா இருங்க!

மாதிரி படம்

மாதிரி படம்

Power Shutdown | மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் நாளை தாம்பரம், அடையார் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,சென்னையில் நாளை சனிக்கிழமை (05.11.2022) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அடையார் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இதனைத்தொடர்ந்து, மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் தடை ஏற்படும் பகுதிகள் : 

தாம்பரம் பகுதி : சிட்லப்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, காமராஜர் தெரு, தனலெட்சுமி நகர், திருவள்ளுவர் நகர், கணபதி காலனி பல்லாவரம் பஜனை கோயில் தெரு, ராஜாஜி நகர், தர்கா ரோடு, பச்சையப்பன் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

இதையும் படிங்க : சொமேட்டோ ஊழியரை தாக்கி பீட்சா, பர்கரை பறித்த ரவுடி... சிசிடிவி காட்சிகள் வைரல்...

அடையார் பகுதி : வேளச்சேரி பைபாஸ் ரோடு (ஏக்சலண்ட் மருத்துவமனை முதல் ஜி.ஆர்.டி வரை), மேட்டுத்தெரு, நாட்டூர் தெரு, ராஜலட்சுமி பகுதி முழுவதும் ராஜ்பவன் ராசாவிட் ஹோட்டல், சங்கீதா ஹோட்டல், திரு.வி.க. தெரு, அன்பில் தர்மலிங்கம் தெரு, நேரு நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

First published:

Tags: Chennai, Power Shutdown