Home /News /chennai /

சென்னைவாசிகள் கவனத்திற்கு.. இங்கெல்லாம் இன்று (ஜூலை 21) பவர் கட்

சென்னைவாசிகள் கவனத்திற்கு.. இங்கெல்லாம் இன்று (ஜூலை 21) பவர் கட்

மின்தடை பகுதிகள்

மின்தடை பகுதிகள்

Chennai power cut : மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், திருவேற்காடு, தாம்பரம், பெரம்பூர் ஆகிய துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் இன்று மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இன்று (21.07.2022) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், திருவேற்காடு, தாம்பரம், பெரம்பூர் ஆகிய  பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அதன்படி, மயிலாப்பூர் பகுதியில்  மந்தவெளி வி.கே.ஐயர் ரோடு, ஜேத் நகர் மெயின் ரோடு, ஜேத் நகர் 1வது மற்றும் 3வது குறுக்கு தெரு பட்டினப்பாக்கம் லேத் காஸ்டல் வடக்கு, மையம், தெற்கு தெரு மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலை சாந்தோம் பாபநாசம் சிவன் சாலை, லலிதா நகர் 1வது மற்றும் 2வது தெரு, சி.பி.சி.ஐ.டி குடியிருப்பு மற்றும் அலுவலகம், பிடாரி அம்மன் கோவில் தெரு, கன்னிலால் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    திருவேற்காடு பகுதி; பொன்னியம்மன் நகர், புளியம்பேடு, வி.ஜி.என் மகாலஷ்மி நகர், பி.எச் ரோடு, கிருஷ்ணா நகர், மேதா மருத்துவமனை, ஏ.சி.எஸ் மருத்துவமனை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்

    தாம்பரம் பகுதி: பல்லாவரம், பழைய பல்லாவரம், திரிசூலம் முழுவதும், ராஜாஜி நகர், மல்லிகா நகர், பாரதி நகர், பவானி நகர் பெரும்பாக்கம் சாந்தி நகர், புது நகர், வேளச்சேரி மெயின் ரோடு, புஷ்பா நகர் சிபிஐ காலனி, ஏரிக்கரை ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

    Must Read : முதல் முறையாக விமானத்தில் பறக்கிறோம்.. ஈஷா யோகா மையத்திற்கு நன்றி தெரிவித்த பழங்குடியின மக்கள்

    கே.கே.நகர் அனைத்து தெருவும், அயனாவரம் முழுவதும், பத்மாவதி நகர் முழுவதும், சூரப்பேட்டை சாலை சுற்றுவட்டாரம், காவேரி சாலை 1 முதல் 7வது தெரு, மூலக்கடை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Chennai power cut, Power cut, Power Shutdown

    அடுத்த செய்தி