ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து -கண்ணாடியை உடைத்து வெளியேறிய பயணிகள்

சென்னையில் ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து -கண்ணாடியை உடைத்து வெளியேறிய பயணிகள்

ஆம்னி பஸ் விபத்து

ஆம்னி பஸ் விபத்து

பூந்தமல்லியில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  பூந்தமல்லி அருகே பெங்களூர் செல்லும் ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சாலை விரிவாக்க பணிகளுக்கு உரிய பாதுகாப்பில்லாததால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

  சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி இன்று அதிகாலை தனியார் ஆம்னி பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது வேகமாக சென்ற லாரி ஆம்னி பேருந்தை இடிப்பது போல் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ் சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்தது.

  இந்த சம்பவத்தில்  பேருந்தில்  இருந்த பயணிகள் அலறி அடித்தபடி வெளியேற முயன்றனர். பேருந்தில் இருந்த அவசர கால வழி திறக்காததால்  முன்பக்க கண்ணாடியை உடைத்து அந்த வழியாக பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து அதில் பயணம் செய்த சில பயணிகளுக்கு சிறு, சிறு காயங்கள் ஏற்பட்டது இதையடுத்து அவர்கள் அங்கிருந்து மாற்று வாகனத்தில் பெங்களூரு அனுப்பி வைக்கப்பட்டடனர்.

  Also Read: கோவை கார் வெடிப்பு: 6வது நபர் கைதில் பரபரப்பு திருப்பம்!

  பூந்தமல்லி - பெங்களூரு நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருவதாலும் இரவு நேரங்களில் உரிய பாதுகாப்பு வசதிகள் ஏதும் செய்யாமல் பணிகள் நடைபெறுவதால் இதுபோன்ற விபத்துக்கு காரணம் என பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை .

  செய்தியாளர்: சோமசுந்தரம் ( சென்னை)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Accident, Chennai, Omni Bus