Home /News /chennai /

சென்னையில் 2 ஆண்டுகளுக்கு பின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம். போலீசார் தீவிர ஆலோசனை

சென்னையில் 2 ஆண்டுகளுக்கு பின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம். போலீசார் தீவிர ஆலோசனை

கோப்பு படம்

கோப்பு படம்

தற்போது வரை 2,400 க்கும் மேற்பட்ட சிலை வைத்தல் தொடர்பான மனுக்கள் வந்துள்ளதாகவும் இந்த எண்ணிக்கை நாளை மாலைக்குள் 5000 ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    விநாயகர் சதுர்ச்சி நாளை மறுநாள் நாடு முழுவது கொண்டாடப்படவுள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலை வைத்தும், இந்து இயக்கங்கள் சாலைகள் மற்றும் தெரு சந்திப்பு பகுதிகளில் பல அடி உயரம் கொண்ட சிலைகள் வைத்து வழிபட்டு பின்னர் கடல், ஆறு, ஏரி, குளம், குட்டை ஆகியவற்றில் சிலைகளை கரைத்து வருவது வழக்கம்.

    ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் எந்தவித பிரச்சினையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பதட்டமான பகுதிகளை கண்டறிந்து அங்கு போலீசார் பாதுகாப்புடன் கொண்டாட்டம் நடைபெறும்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020, 21 ஆண்டுகளில் விநாயகர் சதுர்த்தி  ஊர்வலங்களுக்கு சென்னையில் முழுவதுமாக தடை விதிக்கப்பட்டது. பொதுமக்கள் மட்டும் தங்களது வீட்டுக்குள் சிலை வைத்து வழிபாடு செய்து தனியாக சென்று கடற்கரையில் கரைத்து வரலாம் ஆனால் குழுவாக இணைந்து அல்லது இந்து இயக்கங்கள் சாலை மற்றும் தெரு சந்திப்புகளில் சிலை வைத்து வழிபடுதல் கூடாது என சென்னை காவல் ஆணையரகம் உத்தரவிட்டிருந்தது.

    தற்போது கொரோனா ஊரடங்கு காலம் முடிவடைந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சென்னை முழுவதும் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

    சில நாட்களுக்கு முன்பாக சென்னை காவல் வடக்கு கூடுதல் ஆணையர் அன்பு ஐ.பி.எஸ்., தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா ஐ.பி.எஸ்., ஆகியோர் தலைமையில் 75க்கும் மேற்பட்ட இந்து இயக்கங்களுடன் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
    அதில், கடந்த 2018 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி தகுந்த வழிகாட்டுதலோடு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட வேண்டும் எனவும் எத்தகைய இடையூறும் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடாது எனவும் காவல்துறை உயரதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    மேலும், ஆலோசனையில் கலந்து கொண்ட இந்து இயக்கங்கள் சென்னை முழுவதும் 5500 க்கும் மேற்பட்ட சிலைகள் வைத்து வழிபட உள்ளதாக தெரிவித்திருந்தனர். ஆனால், காவல்துறை அதிகாரிகள் முறையான அனுமதி பெற்று அதன் பின்பு சிலைகள் வைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் தற்போது வரை 2,400 க்கும் மேற்பட்ட சிலை வைத்தல் தொடர்பான மனுக்கள் வந்துள்ளதாகவும் இந்த எண்ணிக்கை நாளை மாலைக்குள் 5000 ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் யாருக்கு அனுமதி அளிக்கப்படுகிறதோ அவர்கள் மட்டுமே சிலை வைக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் சென்னையில் பதட்டமான பகுதிகளான புளியந்தோப்பு, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை போன்ற பகுதிகள் கூடுதல் பாதுகாப்பு போடப்படவுள்ளது.

    விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் பாதுகாப்பு குறித்து சென்னை  காவல்துறை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு இணை ஆணையர்கள் தலைமையில் பதட்டமான பகுதிகளை கணக்கெடுக்க இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் எனவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    குறிப்பாக விநாயகர் சிலை வைத்து வழிபடுதலுக்குப் பின்பு அவற்றை பாலவாக்கம், பட்டினம்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர்  ஆகிய நான்கு கடற்கரைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டுமென சென்னை காவல் ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Chennai, Chennai Police, Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி

    அடுத்த செய்தி