ஹோம் /நியூஸ் /சென்னை /

ஆட்டோவில் கடத்தப்பட்ட குழந்தை... இரண்டே மணி நேரத்தில் மீட்பு... அதிரடி காட்டிய போலீசார்!

ஆட்டோவில் கடத்தப்பட்ட குழந்தை... இரண்டே மணி நேரத்தில் மீட்பு... அதிரடி காட்டிய போலீசார்!

ஆட்டோவில் கடத்தப்பட்ட குழந்தை... இரண்டே மணி நேரத்தில் மீட்பு... அதிரடி காட்டிய போலீசார்!

ஆட்டோவில் குழந்தை இருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.ஆட்டோவை போலீசார் சுற்றிவளைத்த போது ஆட்டோ ஓட்டுநர் வேக மாக ஆட்டோவை இயக்கி தப்ப முயன்றுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  சினிமாவை மிஞ்சும் சம்பவத்தை போன்று ஆட்டோவில் கடத்தப்பட்ட குழந்தையை அடுத்த இரண்டு மணி நேரத்தில் பத்திரமாக போலீசார் மீட்டு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

  சென்னை தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம், திருமலை நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவருக்கு நான்கு வயதில் வர்ஷா என்ற பெண் குழந்தை உள்ளது. புதன்கிழமை இரவு 8 மணியளவில் வீட்டு வாசலில் நின்றுக்கொண்டிருந்த ஆட்டோவில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது வந்த ஆட்டோ ஓட்டுநர் விளையாடிக்கொண்டிருந்த மற்ற இருகுழந்தைகளை கீழே இறங்க சொல்லிவிட்டு வர்ஷாவை மட்டும் ஆட்டோவில் கடத்திச்சென்றுள்ளார். இதை பார்த்த மற்ற குழந்தைகள் கூச்சலிட்டு கத்தியுள்ளனர்.

  குழந்தையின் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசாருக்கு தகவல் கிடைத்த உடனே சுற்றுவட்டாரப்பகுதி முழுவதும் உஷார் செய்யப்பட்டது. மேலும் அந்த வழியாக செல்லும் சாலைகள் அனைத்திலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகன சோதனையிலிலும் போலீசார் ஈடுப்பட்டனர். குரோம்பேட்டை எம்.ஐ.டி மேம்பாலத்தில் வாகன சோதனையில் போலீசார் இருந்த போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த ஆட்டோ வந்துள்ளது.

  Read More : 61 வயது முதியவருக்கு 88வது திருமணம் - முன்னாள் மனைவியை மீண்டும் திருமணம் செய்கிறார்!

  ஆட்டோவில் குழந்தை இருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். ஆட்டோவை போலீசார் சுற்றிவளைத்தபோது ஆட்டோ ஓட்டுநர் வேக மாக ஆட்டோவை இயக்கி தப்ப முயன்றுள்ளார். உடனே சுதாரித்த ரோந்து போலீசார் வாகனத்தில் தூரத்திச்சென்று ஆட்டோவை மடக்கி நிறுத்தினர். ஆட்டோவில் இருந்த குழந்தையை மீட்ட போலீசார் ஆட்டோ ஓட்டுநர் சமோசுதீனை பிடித்தனர்.

  மதுபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் சுமோசுதீனை பிடித்த போலீசார் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Chennai, Crime News