ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னை போலீசுக்கு கிடைத்த 150 செல்போன்கள்.. கோவை கார் வெடிப்பு தொடர்பான சோதனையில் சிக்கிய பொருட்கள்!

சென்னை போலீசுக்கு கிடைத்த 150 செல்போன்கள்.. கோவை கார் வெடிப்பு தொடர்பான சோதனையில் சிக்கிய பொருட்கள்!

போலீஸ் ரெய்ட்

போலீஸ் ரெய்ட்

சோதனை நடந்த இடத்திலிருந்து மின்னனு பொருட்கள், லேப்டாப், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் பறிமுதல்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக சென்னையில் 4 இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில், ரூ. 15 லட்சம் மதிப்புள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

  தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக சென்னையை சேர்ந்த 4 பேரின் வீடுகளில், கடந்த 10ம் தேதி மாநகர போலீசார் சோதனை நடத்தினர்.

  இந்நிலையில் கொடுங்கையூரை சேர்ந்த முகமது தப்ரஸ், ஏழுகிணறை சேர்ந்த தவ்பிக் அகமது, மண்ணடியை சோ்ந்த ஹாரூன், வடக்கு கடற்கரை அங்கப்பன் நாயக்கர் தெருவை சேர்ந்த முகமது முஸ்தபா உள்ளிட்ட 4 பேரின் வீடுகளின் போலீசார் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.

  தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு உதவியதாக இவர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளன. இந்த சோதனையில் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த ஆரூன் ரஷித் என்பவர் வீட்டில் இருந்து ரூ. 4,90,000 , சீனக்கரன்சி ரூ. 1600 , தாய்லாந்து கரன்சி ரூ. 4820 , மியான்மர் கரன்சி ரூ. 50,000 மற்றும் மண்ணடி பகுதியில் உள்ள அவரது டிரேடிங் கம்பெனியிலிருந்து ரூ. 10,30,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

  ராகிங் தடுப்பு.. உடனடியாக இதை செய்யுங்க - அதிரடி உத்தரவிட்ட தமிழக டிஜிபி! (news18.com)

  அதுமட்டுமின்றி சோதனை நடந்த இடத்திலிருந்து 150 செல்போன்கள், லேப்டாப், அடையாள அட்டைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.  மேலும் மின்னனு பொருட்கள், லேப்டாப், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

  இதுதொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட பணம், வருமானவரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், மின்னணு பொருட்களை தடயவியல் துறையினருக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Chennai Police, ISIS