ஹோம் /நியூஸ் /சென்னை /

மேம்பாலங்கள் மூடல்; சாலைகளில் தடுப்புகள்... சென்னையில் தீவிர கட்டுப்பாடுகள்!

மேம்பாலங்கள் மூடல்; சாலைகளில் தடுப்புகள்... சென்னையில் தீவிர கட்டுப்பாடுகள்!

சென்னையில் புத்தாண்டு கட்டுப்பாடுகள்

சென்னையில் புத்தாண்டு கட்டுப்பாடுகள்

அதிவேகமாக வரும் வாகனங்கள், மது அருந்திவிட்டு வரும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அசாம்பவிதங்களை தவிர்க்கும் வகையில் சென்னையில் பல்லாவரம், மீனம்பாக்கம் உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள்  மூடப்பட்டுள்ளன. கத்திப்பாரா மேம்பாலத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆங்கில புத்தாண்டு இன்று இரவு 12 மணிக்கு பிறக்கிறது. 2023ம் ஆண்டை வரவேற்கும் வகையில் பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.

தமிழகத்தில் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை புறநகர் பகுதி ஜி எஸ் டி சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது சென்னை கிண்டியில் உள்ள கத்தி பாரா மேம்பாலத்தில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர் .

சென்னை முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் பல்லாவரம் குரோம்பேட்டை மேம்பாலங்கள் முற்றிலுமாக மூடப்பட உள்ளது .

பல்லாவரம் ரேடியல் சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்படுவதோடு அதிவேகமாக வரும் வாகனங்கள், மது அருந்திவிட்டு வரும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிழக்கு கடற்கரை சாலை, அண்ணா சாலை மற்றும் கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

First published:

Tags: New Year 2023