முகப்பு /செய்தி /சென்னை / பெரம்பூர் கொள்ளை வழக்கில் தலைமறைவான குற்றவாளிகள் : பெங்களூர் போலீசாரிடம் சிக்கியது எப்படி?

பெரம்பூர் கொள்ளை வழக்கில் தலைமறைவான குற்றவாளிகள் : பெங்களூர் போலீசாரிடம் சிக்கியது எப்படி?

கைதானவர்கள்

கைதானவர்கள்

Crime News : சென்னை பெரம்பூர் கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் வேறொரு வழக்கில் பெங்களூர் போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை பெரம்பூரில் ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான ஜே.எல் கோல்டு பேலஸ் என்ற நகைக்கடையில் கடந்த மாதம் 9ம் தேதி நள்ளிரவு ஒரு கொள்ளை கும்பல் வெல்டிங் மிஷின் மூலமாக கடையை ஓட்டை போட்டு உள்ளே இருந்த 9 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் என 6 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றது. மேலும், நகைக்கடையில் இருந்த சிசிடிவி டி.வி.ஆர் கருவிகளையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, குற்றவாளிகளை பிடிப்பதற்காக 10 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் போலியான நம்பர் பிளேட், மங்கி குல்லா, கையுறை அணிந்து வந்து கொள்ளையடித்ததால் கைரேகை சோதனையிலும் துப்பு கிடைக்கவில்லை. மேலும், சிசிடிவி கேமராக்களில் சிக்காத வண்ணம் சாலையை தேர்ந்தெடுத்து சென்றதால் அவர்கள் எங்கு சென்றனர் என்ற விவரமும் தனிப்படை போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து, ஆந்திர செல்லும் வழியில் இவர்கள் சென்ற கார் பதிவானதால் அதனை வைத்து ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா என பல மாநிலங்களில் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

ஆனாலும் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குற்றவாளிகள் பற்றிய எந்த துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. மேலும், பல மாநிலங்களுக்கு சென்று இதேபோன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பற்றி விசாரிக்கும் பணிகளில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர். இதனிடையே கடந்த 4 தினங்களுக்கு முன்பாக பெங்களூரு  மகாலட்சுமி லே அவுட் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க : ஆங்கிலத்தில் சரளமாக உரையாற்றிய மாணவிகள்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு..

அப்போது சந்தேகப்படும்படி வந்த இருவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர்கள் 2.5 கிலோ தங்கம் எடுத்து வந்ததும், அந்த தங்கம் பெங்களூர் பகுதியில் கொள்ளையடிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து பெங்களூர் சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் அந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய இருவரை பெங்களூர் போலீசார் கைது செய்தனர்.

மேலும், சென்னை பெரம்பூர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் குறித்த சிறிய துப்புகூட கிடைக்காமல் திணறிக் கொண்டிருந்த சென்னை போலீசார் வேறு வழியின்றி சிசிடிவி காட்சிகளில் சிக்கிய கொள்ளையர்கள் புகைப்படங்களை மற்று மாநில போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். அப்போது சென்னை போலீசார் அனுப்பிய புகைப்படங்களும், பெங்களூர் போலீசார் பிடித்து வைத்திருந்த குற்றவாளிகளும் ஒரே நபர்கள் என தெரியவந்தது.

இதனையடுத்து பெங்களூர் சென்ற சென்னை போலீசார் ஏற்கனவே பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள 2 நபர்களை  கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து, சென்னை போலீசாரின் விசாரணையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள 2 நபர்களும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கஜேந்திரன் மற்றும் திவாகர் என்பது தெரியவந்தது. ஏற்கனவே, பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது கங்காதரன் மற்றும் ஸ்டீபன் என்பதும் தெரியவந்தது.

சென்னை பெரம்பூர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் தான் பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் என்பதும் பெரம்பூர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மொத்த நபர்களும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

பெரம்பூர் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்படுவதற்கு முன் கொள்ளையர்கள் ஒரு மாத காலம் இந்த கடையை பற்றியும் போலீஸ் ரோந்து செல்லும் நேரம் குறித்தும் உளவு பார்த்து வந்துள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது கங்காதரன் என்பதும் தெரியவந்தது. மேலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள திவாகர் தவிர மற்றும் அனைவர் மீதும் இதே பாணி கொள்ளை வழக்குகள் பல்வேறு மாநிலங்களில் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. குறிப்பாக பள்ளி படிப்பை கூட முடிக்காத இவர்கள் கொள்ளையடிக்கும்போது தடயம் சிக்காமல் எப்படி கொள்ளையடிப்பது என பயிற்சியில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

இதையும் படிங்க : சீரமைக்கப்பட்ட திருச்சி காவிரி பாலம் திறப்பு : நிம்மதி பெருமூச்சு விட்ட வாகன ஓட்டிகள்

ஐ.டி.ஐ வெல்டிங் கோர்ஸ் படித்துள்ள கொள்ளை கும்பல் தலைவன் கங்காதரன் அதன் மூலமாக உடனடியாக வெல்டிங் செய்து வழியை ஏற்படுத்தி கொள்ளையடிக்க திட்டம் வகுத்து கொடுத்துவந்துள்ளார்.

கொள்ளையடிப்பதற்காக ஒரு மாதத்திற்கு முன் சென்னை வந்த இவர்கள் நேரடியாக கோயம்புத்தூர் சென்று அங்கு ஒரு காரை திருடிச் சென்று ஆந்திரா மாநிலத்தில் திருடப்பட்ட ஒரு காரின் பதிவு ஆவணங்களை மாற்றி சென்னையில் வந்து திருடிச் சென்றுள்ளனர்.

பெரம்பூர் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 நபர்களை பெங்களூர் போலீசார் கைது செய்த நிலையில் 2 1/2 கிலோ தங்கம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இனோவா காரையும் பெங்களூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதில் தற்போது கஜேந்திரன் மற்றும் திவாகர் ஆகிய இருவரை சென்னை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர். மேலும், இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருக்கும் அருண் மற்றும் கௌதம் ஆகிய இருவரை பெங்களூரு போலீசார் மற்றும் சென்னை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

First published:

Tags: Chennai, Local News