டிக்டாக் பிரபலம் ரமேஷை அவரது மனைவி தாக்கும் வீடியோவை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புளியந்தோப்பு கேபி பார்க் குடியிருப்பை சேர்ந்தவர் டான்சர் ரமேஷ். இவர் நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு பிரபலமடைந்தார். தொடர்ச்சியாக பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் நடனமாடி ரமேஷ் பாராட்டுகளை பெற்றார்.
அஜித் நடிப்பில் வெளியான துணிவு மற்றும் ரஜினி வெளிவர உள்ள ஜெயிலர் படத்திலும் சிறிய வேடங்களில் ரமேஷ் நடித்து பிரபலமடைந்தார். இவர் கடந்த 27ஆம் தேதி சென்னை புளியந்தோப்பில் உள்ள குடியிருப்பின் 10வது தளத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.
இந்நிலையில், உயிரிழந்த ரமேஷின் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில், அடி தாங்க முடியவில்லை என ரமேஷ் கூறுவதும், அவரது இரண்டாவது மனைவி இன்பவல்லி கையில் உருட்டுக்கட்டை ஒன்றை வைத்திருப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து பேசின் பிரிட்ஜ் போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai Police, Commit suicide, TikTok