Home /News /chennai /

வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கு : காவல் ஆய்வாளர், பாஜக பிரமுகர் உட்பட 21 பேர் குற்றவாளிகள் - நீதிமன்றம் அறிவிப்பு

வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கு : காவல் ஆய்வாளர், பாஜக பிரமுகர் உட்பட 21 பேர் குற்றவாளிகள் - நீதிமன்றம் அறிவிப்பு

எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன்.

எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன்.

சிறுமியின் உறவினர் ஷகிதா பானு, உடந்தையாக இருந்த எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ், மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான அஜி என்கிற வெங்கட்ராமன், ஸ்ரீபெரும்புதூர் கார்த்திக், திரிபுராவைச் சேர்ந்த தெபாசிஸ் நாமா உள்ளிட்ட 26 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
சென்னை வண்ணாரப் பேட்டையில், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இன்ஸ்பெக்டர் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இது குறித்து வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் 26 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

சிறுமியின் உறவினர் ஷகிதா பானு, உடந்தையாக இருந்த எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ், மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான அஜி என்கிற வெங்கட்ராமன், ஸ்ரீபெரும்புதூர் கார்த்திக், திரிபுராவைச் சேர்ந்த தெபாசிஸ் நாமா உள்ளிட்ட 26 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதில் 22 பேரை கடந்த 21 நவம்பர் 2020 அன்று காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 26 பேர்களில், இரு பெண்கள் உள்பட 4 பேர் தலைமறைவாகி விட்டனர். மீதமுள்ள 22 பேர்களில் மாரீஸ்வரன் என்பவர் விசாரணை காலக் கட்டத்தில் இறந்து விட்டார்.

இதையும் வாசிக்க: தமிழகத்திலிருந்து இலங்கைக்கு படகில் கடத்திய 400 கிலோ கஞ்சா பறிமுதல்... 10 பேர் கைது

மீதமுள்ள 21 பேர்கள் மீதான குற்றச்சாட்டுகளை சென்னை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் புகழேந்தி, மதன்குமார், சாயிதாபானு, சந்தியா, செல்வி, கார்த்திக், மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா (எ) கஸ்தூரி, ராஜேந்திரன், காமேஸ்வரராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், வினோபாஜி, கிரிதரன், ராஜாசுந்தர், நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் (எ) அஜய் கண்ணண் ஆகிய 21 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.

மேலும் இவர்களுக்கான தண்டனை விவரத்தை வரும் 19 ஆம் அறிவிக்கப்படும். குற்றம் சாட்டப்பட்ட மாரி, பாஷா, முத்துபாண்டி மற்றும் மீனா ஆகியோர் தலைமறைவாகி விட்டதால் அவர்களுக்கு எதிரான வழக்கு தனியாக பிரித்து விசாரிக்கபடும் என நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Chennai, Court, Pocso

அடுத்த செய்தி